பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் நீதி விசாரணை முறைக்கு இந்த பட்டயம் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

மூலம்

ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718க்கு மேல் கலியுக சகார்த்தம் 4897 க்கு மேல் செல்லாநின்ற நழ வருஷ தை மாதம் 27ஆம் தேதி நாயற்றுக்கிளமையும் அவிட்ட நச்சேத்திரம் பரிநாம யோகமும் வாலவாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில்

ஸ்ரீமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுளுறாயர் பிரதாபறாயர் நற்பதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர்வுடையார் வீரசமந்தறாயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயர்வுடையார் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிசூர்ச்சமஷ்த்தானம் சாமறாயர்வுடையார் உபைய காவேரி மத்தஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனரூடராய் பிருதுவிராச்சியம் மத்திசம் பண்ணிக் கொண்டிருக்கும்போது,

யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய அசுரது நவாப்பு அயிதரலிக்கான் சாயிவு அவர்கள் குமார நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாயபு அவர்கள்கு றாச்சியம் பரிபாலனம் பண்ணுகிறபோது யிவர்கள் காரியத்திற்கு முக்கிஷ்த்ராயியா மசூர் கச்சேரி மகாறாயர் றாயேஷ்த்திரி மீரு சாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது,

கொங்குமண்டலத்துக்குச் சேற்ந்தா அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள், அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குரிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதாரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள், சிரச்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூர் அமுலுதாரர் சுமானுக்கான் சாயிவு அவர்கள், செனபாக கோபால கிஷ்ட்டினய்யனவர்கள், சிரஷ்த்தார் சல்லய்யன் அவர்கள், துடுப்பூதி அமுலுதார் மீரண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள், சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமலுதார் சாலீ சாயிபு அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சனபாக சுப்பய்யன் அவர்கள்.