பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

217

1765ஆம் ஆண்டு ஐப்பசி

ஐப்பசி 2ம் நாள்

எழுதப்பட்ட

கோயமுத்தூர்ச் செப்பேட்டில் “மைசூர் சமஸ்தானம்" சீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடையராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய னாளையில் அயிதரல்லி நவாபு பாதர் சாயபு என்ற தொடர் காணப்படுகிறது.

1799ஆம் ஆண்டு எழுதப்பட்ட பல்லடம் கஸ்பா நாரணபுரம் செப்பேட்டில் “மயிசூரு சமஸ்தானம் தளவாய் டிப்பு சுலுத்தான் பாட்சா அருளாநின்ற காலத்தில்” என்ற தொடர் காணப்பட்டது.

மதுரை நாயக்க மரபில் முதல் மன்னனான விசுவநாத நாயக்கனும் தளவாய் அரியநாத முதலியாரும் மதுரைக் கோட்டையைச் சுற்றி பார்வையிடும்போது 72 கொத்தளங்கள் கோட்டையில் இருந்ததால் அவர்கள் ஆட்சிப் பகுதியில் 72 பாளையங்களை ஏற்படுத்தி ஒவ்வொரு பாளையம் சார்பிலும் ஒரு கொத்தளத்தில் வீரர்களை நிறுத்த ஏற்பாடு செய்தனர் என்றும் மெக்கன்சியின் ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களில் பழைய பாளையக்காரர்களும் புதிய பாளையக்காரர்களும் இருந்தனர்.

ஐதர் அலி, திப்பு சுல்தான் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பாளையங்கள் நிலை என்ன என்பதைப் பல ஆவணங்கள் கூறுகின்றன. நிகரவரி வருவாயில் 10 ல் 7 பங்கு அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய எந்தவொரு பாளையக்காரரும் எவ்விதத் தொல்லைக்கும் ஆளாகவில்லை. ஆனால் வரி வசூலில் கண்டிப்பு இருந்தது.

போர்க்காலத்தில் போர் நடவடிக்கையால் பட்டம் இழந்த பல பாளையக்காரர்கட்கு ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆணைப்படி அவர்கள் அதிகாரிகள் பட்டம் சூட்டி பாளையக்காரர்கள் ஆக்கியுள்ளனர். தாராபுரம் துக்குடி பொருளூர் பாளையக்காரன் நல்ல பெரியாக்கவுண்டன் மெக்கன்சியின் உதவியாளர்கட்கு எழுதிக் கொடுத்த ஆவணத்தில்,

“என் தோப்பனார் தெய்வகதியான பிறகு எனக்கு அக்காலத்துக்கு மைசூர் சமஸ்தானத்துக்குத் துரையான அயிதர் அல்லிகான் சாயபு துரை அவர்கள் அரசாட்சி நாளையில் இந்தச் சீமைக்கு அதிகாரியாக வந்த பீமராவ் அவர்கள் உத்தரவுப்படிக்கு நாடனைவரும் கூடிப் பட்டமும் கட்டி நல்ல பெரியாக் கவுண்டன்