பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

1799 லேயே

திப்பு சுல்தானின் மறைவிற்குப் பின் கும்பினியாரின் முழுக்கட்டுப்பாட்டில் கொங்கு மண்டலம் முழுவதும் வந்துவிட்டது. அப்போது பாளையக்காரர்கள் திப்பு காலத்தைவிட அதிக வரி கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிறிது வரி பாக்கியிருந்தால்கூட பாளையங்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஏலம் விடப்பட்டுள்ளது. பாளையக்காரர்கள் விரட்டப்பட்டுள்ளனர். பலர் கைதானார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். பாளையம் ஆண்ட குறுநில மன்னர்போல வாழ்ந்தவர்கட்கு 30, 40 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பெரும்பாலான பாளையக்காரர்கள் உயிருக்குப் பயந்து கும்பினி அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சி வாழ்ந்துள்ளனர். இதையும் கும்பினிகால ஆவணங்களே

கூறுகின்றன.

ஏற திம்மய்ய நாயக்கர் திப்பு காலத்தில் தன் பாளையத்துக்கு 2703 பொன் வரி செலுத்தி வந்தார். கும்பினி நிர்வாகம் வந்தவுடன் வரி 6000 பொன்னாக உயர்த்தப்பட்டது. கும்பினிக் காகிதப்படி பணம் செலுத்துவதில் பாக்கி ஏற்பட்டது. ஆயர்துரை என்பவர் வந்து பாளையத்தை ஜப்தி செய்துவிட்டார். ஒரு வருடம் கழித்து ஏற திம்மய நாயக்கனுக்கு மாதம் 100 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது (மெக்கன்சி ஆவணம் எண் 2829)

சிஞ்சுவாடி பாளையக்காரர் சின்ன பொம்ம நாயக்கன் 14 கிராமங்களை நிர்வாகம் செய்தவர். ஆண்டுக்கு 7004 பணம் வரி கட்டியவர். கும்பினிக்கு விரோதி என்று கூறி அவனைத் தூக்கிலிட்டு அவர் மகன் குமார பாளையக்காரர் முத்து மலையாண்டி சம்பே நாயக்கனைத் திண்டுக்கல்லில் சிறை வைத்தார்கள். கும்பினிக் கலெக்டர் காரோ துரை அவர்கள் "கடாட்சம் வைத்து” பாளையக்கார் முத்து மலையாண்டி சம்பே நாயக்கனுக்கு மாதம் 13 பணம் சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்தாராம். (மெக்கன்சி ஆவணம் எண் 3130) 13 பணம் சம்பளம் பெற்ற பாளையக்காரரின் குடும்பத்தில் 15 உறுப்பினர்கள் இருந்தனர்.

""

நிலக்கோட்டை பாளையக்காரர் கூளப்ப நாயக்கர் "விறலிவிடு தூது" இலக்கியம் பெற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்த பரம்பரை. ஆண்டு தோறும் 5900 ரூபாய் வரி செலுத்தி வந்தார்கள்.