பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

105. கொடைகளை நிறுத்திய கும்பினியார்

சேதுபதி மன்னர்கள் பள்ளி வாசல்களுக்கும், தர்காக்களுக்கும் பலவிதமான கொடைகளை ஏராளமாக வழங்கியிருக்கின்றனர். அவை பெரும்பாலும் இன்று நடைமுறையில் இல்லை. அதற்குக் காரணம் கும்பினியார் ஆட்சியில் 1811ஆம் ஆண்டு சர்வ மானியங்களைக் கணக்கெடுத்துப் பலமானியங்களை நிறுத்தி விட்டனர். இஸ்லாமிய நிறுவனங்கள் பலவும் இதனால் பாதிக்கப்

பட்டன.

இராமநாதபுரம் கோட்டைக்கு வெளியே லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள புனித குத்பு சாயபு அவர்கள் தர்காவிற்கு இராமநாதபுரம் சுங்கச் சாவடியிலிருந்து நாள்தோறும் ஒரு பணமும், வருடத் திருவிழாவிற்கு 8 கலம் அரிசியும் இரண்டு கிடாயும் கொடுக்க வேண்டும் என்று 1769ல் சேதுபதி மன்னர் உத்தரவிட்டது நிறுத்தப்பட்டது.

இதனைப் போன்றே திருப்புவனம் மலுங்கு சாய்பு தர்காவிற்கும், பார்த்திபனூர் தாடிப் பக்கீர் தர்காவிற்கும் கொடைகள் நிறுத்தப்பட்டன. இவற்றை இராமநாதபுரம் எஸ். எம். கமால் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

எஸ்.எம்.

-

மதுரை மாவட்ட ஆவணங்கள் 4680 A. 1833 பக் 406 மதுரை மாவட்ட ஆவணங்கள் 1193/27.4.1815. ப. 86-88

சேதுபதி மன்னர் செப்பேடுகள்: டாக்டர். எஸ்.எம். கமால்