பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

17-A. இலுப்பூர் சிவன் கோயிலுக்கு மதுரை சுல்தான் கொடை

திருச்சி வட்டம், இலுப்பூரில் உள்ள சிவன் கோயிலில் றைவனுக்கு பொன்வாசிநாதசுவாமி என்று பெயர். கல்வெட்டில் "தேவும் திருவும் உடைய நாயனார்” என்று பெயர் கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 745ஆம் ஆண்டு தைமாதம் மதுரையில் ஆதி சுல்தான் ஆட்சிக்காலத்தில் அன்னவாசல் கூற்றம் இருக்குமணி உடையான் பெரியவன் வழுவாதரையர் என்பவரைக் கொண்டு தச்சன்வயல் என்ற ஊரை குடிநீங்காத் தேவதானமாக ஏலத்துக்குவிட்டு கிடைத்த 80 “வாளால் வழி திறந்தான்" பணத்தைக் கொண்டு கோயிலில் பூசை நடத்த ஏற்பாடு செய்தார். அந்த ஊரின் வருவாயிலிருந்து 80 பணம் கோயிலுக்கும் கொடுக்க வேண்டும்.

கல்வெட்டின் தொடக்கத்தில் ‘ஆதி சுரத்தான்' (சுல்தான்) என்று எழுதப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் ஈரோடு மாவட்ட அலங்கியம் ஆகிய ஊர்களிலும் 'ஆதி சுல்தான்’ கல்வெட்டுக்கள் உள்ளன.

Annual Report on Epigraphy 297 of 1944