பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 JAN 2008 தொகுப்பாசிரியர் உரை ஒரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச்சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி பெரும் அளவு நடைபெறாததே இதற்குக் காரணம் ஆகும். இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களின் பங்கு இல்லாமல், அவை இடம் பெறாமல் தமிழக வரலாறு முழுமையாகாது. அவ்வகையில் அவற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் நண்பர்கள் பலர் முயன்று ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் முனைவர் எஸ்.எம். கமால், புதுக்கோட்டை முனைவர் ஜெ. ராஜா முகம்மது, பாளையங்கோட்டை செ. திவான், இலங்கை மானாமக்கீன், பாளையங்கோட்டை முனைவர் முகம்மது நாசர், ஈரோடு எம்.கே. ஜமால் முகம்மது, ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு சி.எம்.ஏ. அப்துல் காதர், ஈரோடு செவாலியர் கொங்கு கொளந்தசாமி, ஈரோடு முனைவர் பி. சின்னையன் ஆகிய பலர் ஒவ்வொரு துறையில் அரிய பணிகள் சில ஆற்றியுள்ளனர். தினமணி நாளிதழ் வெளியிட்ட ரம்ஜான் மலர் மூலமும் பல செய்திகள் அறிமுகமாயின. திருச்செங்கோடு எம். விஜயகுமார், ஈரோடு கே.ஏ. திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் ஆறுமுகம் சீதாராமன் போன்ற நாணயத் தொகுப்பாளர் பணிகளும் பாராட்டத்தக்கது..