பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புலவர் செ. இராசு 5 கழகப் பருவ ஏடான ‘ஆவணம்’ இதழிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடான ‘கல்வெட்டு' இதழிலும் வெளியிட்டனர். அவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள பெரும்பான்மையான ஆவணங்களின் மையக்கருத்து ‘மதநல்லிணக்கம்' என்பதுதான். இஸ்லாமியப் பெருமக்கள் இந்துக்களையும், இந்துக் கோயில்களையும், இந்து மடங்களையும், இந்துப் பெருமக்கள் இஸ்லாமியப் பெருமக்களையும், பள்ளிவாசல், தர்காக்களையும் பெருமையுடனே மதித்துப் போற்றிக் கொடைகள் கொடுத்துப் புரவலர்களாக விளங்கிய செய்திகள் தமிழ்நாட்டில் பன்னெடுங்கால ஆவணங்களில் பரவலாய்க் கிடைக்கின்றன. இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களே மிக அதிகம் ஆகும். மைய அரசின் தொல்லியத் துறை, கல்வெட்டுப் பிரிவினர் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்திற்கும் தலைமையகத்தை மைசூரில் நிறுவியுள்ளனர். உருது, அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுகட்கு மட்டும் தனித் தலைமை அலுவலகத்தை நாகபுரியில் நிறுவியுள்ளனர். தொல்லியல் துறை வெளியிடும் கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்களுக்குத் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டெழுத்துக்களோடு அந்தந்த வட்டார மொழியிலும் செய்தியைப் பொறிப்பது இஸ்லாமியப் பெருமக்கள் வழக்கம். அவ்வகையில் தமிழ்நாட்டில் பல அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்கள் தமிழிலும் அருகிலேயே எழுதப் பட்டுள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களில் பெரும்பாலும் தமிழ் வருடம், மாதம், தேதியும், தமிழ் எண்களுமே பொறிக்கப்பட்டுள்ளன. அடக்கத் தலங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மிகப் பெரும்பான்மை ஆதலின்அவை பற்றிய பொதுவான குறிப்பும், சில மாதிரிக் கல்வெட்டுக்களும் மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆவணத்திலும் அவை உள்ள இடம், காலம், செய்தி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தொகுப்புச் செய்திகள் முழுமையாக முன்னுரையில் இடம் பெறவில்லை.