பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 தமிழகக் குறுநில வேந்தர் துரத்தியடித்துத்தான் என்று தரங்கினி நூலிற் (Stein, It 300) கூறலானறியப்படுவது. இவ்வேள் குலத்துப் பெருந் தலைவனாக நன்னனென்பான் இருந்த எழில் மலையி லுள்ள செம்புறழ் புரிசைப் பாழியை, இளம்|பெருஞ்சென்னி என்னுஞ் சோழன் தன்குடிக் கடனாதலிற் சென்று பொடி யாக்கினான் எனச் சான்றோர் தெளிவித்தலாலும் இவர் தொன்மைப் பகைமையறியலாம். இதனைச் சோழர் பெருமகன், "விளங்குபுகழ் நிறுத்த விளம் பெருஞ்சென்னி குடிக்கடனா தலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழிநூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்றயானை” (அகம்.375) என்பதனால் நன்கறிக. இதன்கண் (வேளிருடைய) பாழி யழித்தல் சோழர் குடிக் கடனென்றும், அது முன்னைச் சோழர் தொடங்கி முடியாதகுறைவினை என்றும், அதனை முடித்தற்கு இவ்விளம் பெருஞ்சென்னி படையெடுத்துப் போய் அவர்க்குத் துணையாய் நின்ற வடுக வேளிரைச் சவட்டிப் பாழியை பொடி செய்தனன் என்று கூறுதல் காண்க. பாழி வேளிர்க்குரியதாதல் 'அணங்குடை வரைப்பிற் பாழியாங்கண் வேண்முதுமாக்கள் வியனகர்க் கரந்த அருங்கல வெறுக்கை” என வருதலானறியலாம். (அகம்-372) பாழி என்பது பாழிக்கொடி கட்டிய ஊர் எனக் கொள் ளலாம். பாழித்துவசம் வேள்புலச்சளுக்கர்க்குரியதென்பதும் இது பல்வகைக் கொடியும் எழுதியதோர் கொடி என்பதும் சாசனவல்லாரறிந்தனர். அக்கொடியுடைமையால் எழின் மலைக் கோட்டை பாழி எனலாயிற்றென நினைக. இவ்வாறே நன்னன் வேண்மானுக்குரிய பாரம் என்னும்