________________
ரா. இராகவய்யங்கார் 49 இனி, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழியரச ரென்று நச்சினார்க்கினியர் கூறுவது திரு விக்கிரமாவ தாரத்தை நினைந்து கூறியதாமெனின் அது இவ்வரலாற் றிற்கு மலையா தியையுமென்க. திருவிக்கிரமம் (உலகை மூன்றடியாலளத்தல்) இறைவன் காச்யப முனிவர்க்கு மகனாயவதரித்த காலத்தே நிகழ்த்தியதாகும், காச்மீர தேச வரலாறும் காச்யப முனிவரையே முதன்மையாகக் கொண்டு நிகழ்தல் முன்னரே காட்டினோம். அக்காச்மீர நாட்டார் காச்யப புத்திரராதலால் அவர் வழியும் நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழியும் ஒன்றாதல் பற்றி அந் நாட்டரசர் தம்மை நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழி யினர் எனக் கூறிக் கொள்வதும் சாலப் பொருந்துவ தேயாம். இங்ஙனங் கொள்வது தமிழர் பழைய வரலாற்று டன் மலையாது நிலவுதல் காண்க. இவ்வேளிரே சிந்து சமவெளி மக்களுடன் தொடர்பு கொண்டு பின்னர்த்தென்னாடு போந்தனர் என்றும் ஊகிக்க இட முண்டு. நாகரீக