________________
.இராகவய்யங்கார் 53 யடுதல் காண்க. மதுரைக் காஞ்சியில் இவரை “நான் மொழிக் கேசர் தோன்றியாங்கு" என்றார். இவ்விடத்து நச்சினார்க்கினியர்“ 'நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற் போன்று” என வுரை வுரைத்தார். இங்ஙன நாற் கோசர் மொழித் தோன்றி யாங்கு எனச் சிதைத்துக் கூட்டாது நான் மொழி நாட்டுக் கோசர் தோன்றி னாற் போன்று எனக் கிடந்தபடியே பொருள் கொள்ளலா மென்க. முற்காலத்து நான்மொழி நாடென ஒன்றுண் டென்பது சாசன ஆராய்ச்கியாளர் கண்டது. இதனைத் திருவறைக் கல்லும், நான் மொழி நாடும் உடைய வத்த ராயனான “விடுகாதன்" (Topographical List of South Indian Inscriptions No.213-11 of 1906) என்பதனால் அறியலாம். இதன் கண் கூறப்பட்ட திருவறைக்கல் இக் காலத்து நாமக்கல் என வழங்குவதென்று துணியப்படுவது. இதன் கண் கூறிய நான்மொழி நாடு திருவறைக் கல்லுக் குப் பக்கத்ததாமென்பது பொருந்தும். ஈண்டு நான்மொழிகளாவன: தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம் என்பனவாகும். இந் நான்மொழியும் வழங்குதற்குரிய எல்லையில் இந்நாமக்கற்புறம் இருத்தல் பற்றி இப்பெயரெய்தியதென்று தெளியலாம். இந்நான் மொழி நாடு மழகொங்கின் வடக்கணுள்ளதனால் ஈண்டு முன் வதிது பின் குடகிற் குடியேறிய கோசர் "கொங்கிளங் கோசர், குடகக் கொங்கர்” எனப்பட்டாரென்று கொள்ளத் தகும். இனி இங்ஙனமன்றி மாமூலனார் அகப்பாட்டில் (15) 'மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் தோகைக் காவிற் றுளுநாட்டன்ன” எனக் கூறுதலாற் கோசர் ஆதியிலே துளுநாட்டின் வதித வர்தாமென்றும், பின்னர்க் கொங்கின் வதிதலாற் கொங் த.கு.வே-4