பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 59 சிறப்பரென்றும், இவர் வட நாட்டில் ஜலர் எனவும், அயிரர் எனவும் பெயர் சிறந்தனர் என்றும், இவருள் ஒருவன் தான்.காரவேலா என்னுங் கலிங்க வேந்தனென் றும் கருதுவாருண்டு. காரவேலா வேந்தன் அத்திகும் பாச்சாசனத்திற்றன் னைச் சேதியர் வழியினன் என்று வெளியிடுதலால், இவன் கோசமாண்ட உதயணனுடையதாயின் மரபைச் சேர்ந்தவ னாதல் தெளிவாகும். உதயணன் மாதுல னாட்டை யும் தந்தை நாட்டையும் ஒருங்கு ஆண்டவனென்பது பெருங்கதையான் அறியப்பட்டது. இனி இவர் வத்ஸ தேசத்துக் கோசம் என்ற தலை நகரினின்று வந்தவராதலான் இளங்கோசர் என வழங்கப் பட்டனரெனின் அதுவும் நன்கு பொருந்தும். வத்ஸ மொழி ஆரியத்தில் இளமைக்குப் பெயராதலான் வத்ஸ கோசர்- இளங்கோசர் என மொழி பெயர்த்துத் தமிழரால் வழங்கப் பட்டனரென்றுங் கொள்ளலாம். கோசரைக் கூறிய பல விடத்தும் சான்றோரெல்லாம் பல்லிளங் கோசர், நல்லிளங் கோசர், கொங்கிளங் கோசர் என வழங்கிக் காட்டலான் இஃது உடலிளமை பற்றிய தாகாதென்பது ஒருதலையாகத் துணியலாம். வத்ஸ தேசத்தை இளநாடெனக் கொண்டு அந்நாட்டு வேந்தனை இளங்கோவென்றும், அந்நாட்டுக் கோசரை இளங் கோச ரென்றும் வழங்கினரென்பது பொருந்தியதாகும். அடி யார்க்கு நல்லார் கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசரும் என்றது கொங்கு மண்டிலத்துள்ள வத்ஸ வேந் தாகிய கோசரும் என்னுங் கருத்தா லென்றுய்த்துணர லாகும். மஹா மஹோபாத்யாய கங்கா நாத்ஜா என்னும் பெரியார் (தர்பங்கா மந்திரியார்) கோசத்தை யடுத்துள்ள பிரயாகையை, ‘இளவாஸா என்று பழையோர். கூறுவர்" என்று சொல்வர். இங்ஙனங் கொள்ளாது கோசர் எப் போதும் இளமையோடே யிருப்பரென்று துணிவது