பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவய்யங்கார் அவர் கதை நோக்கியறிக. “நன்றல் காலையு நட்பிற் கோடார் (அகம். 113.)” என்ற இக்கோசர் பெரும் பண்பு உதயணன் சிறைப்பட்டிருந்த போது அவன் நண்பனாகிய யூகி (யௌகந்த ராயணன்) அவனை விடுவிக்கப்பட்ட பாட்டானன்கறியலாகும். 61 இக் கோசர்க்குச் சிறந்த சென்று வழிப்படு உந்திரி பில் சூழ்ச்சி' யென்பது யூகி முதலியோர் உதயணன் பகை வெல்ல வேண்டிப் புரிந்த அரிய பெரிய சூழ்ச்சிகள் பலவற் றாலும் நன்கறிந்ததாகும். பிறவும் இவ்வாறே ஒட்டியறிக. இனி இக் கோசர் கொங்குமண்டிலத்தே யல்லாமல் மேற்கடற் புறத்துத் துளு நாட்டினும், கீழ்க்கடற்புறத்து யமம் என்னும் ஊரினும் சோழர் உறையூரினும் வதிதன ரென்பது பழம் பாடல்களா னறியலாவது. கோசர் துளு நாட்டன்ன” (அகம். 15) என்பதனால் இவர் துளுநாட்டு மிக்கிருத்தல் நன்கறியப் பட்டதாம். கொங்கிளங் கோசர் என்றதனால் இவர் கொங்கில் வதிதல் புலனாயிற்று. ‘‘செல்லூர்க் குணா அது பெருங்கடன் முழக்கிற்றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினும்" (அகம்.90) என வருதலான், இவர் கீழ்கடற் பக்கத்துச் செல்லூர்க் குக் கிழக்கே நியமம் என்னும் ஊரில் வாழ்ந்தது புலனா கும். செல்லூர்க் குணா அது பெருங்கடல் என்றதனால் நியமம் என்னும் ஊர் கீழ்கடலை யடுத்துள்ள துணரப் படும். இங்குக் கூறியபடியே சோணாட்டிற் செல்லூரும் அதன் கீழ்த் திசையில் நியமம் என்னும் ஊரும் இருப்பது கண்டு கொள்க. சோணாட்டு இவர் வலிபெற்ற வீறு தலைக்கண்டு பொறாது கிள்ளிவளவன் இவர் படையைச் சிதற அடித்தனன் என்பது,