________________
62 தமிழகக் குறுநில வேந்தர் "வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி” என வருதலான் அறியப்படுவது காண்க. (அகம்.205) சங்க காலத்து இச் செல்லூர்ப்புறம் கோசராற் பெருஞ் சிறப்புப் பெற்று விளங்கியதென்பது "செல்லூர்க் குணா அது கோசர் நியமமாயினும்...... கொள்குநரல்லர்." (அகம் 90) எனக் கூறியதனா னுய்த்துணரலாகும். இவ்வூரிற் சிறந்த நல்லிசைப் புலவரும் உண்டென்பது “செல்லூர்க் கோசனார் (அகம் 66) என்பதனா னறியலாம். இக் கோசரிற் பலர் பெருந் தமிழறிஞராய்ச் சான்றோரால் நன்கு மதிக்கப்படுதல் 'கருவூர்க் கோசனார்' (நற்றிணை. 214) என்னும் பெயரானறியலாம். ன பல்லார்க்கு மீயும் பரிசிற் கொடைத் தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன். மல்ல லந்தார் செஞ்சொற் செருந்தைதன் றென்னுறந்தை வஞ்சிக் கொடிமருங்குல் வந்து யென்றாளும் (யாப்பருங்கலவிருத்தி. ஒழிபியல்) என்னும் பழம் பாட்டான், இவரிற் கொடையானும் வீரத் தரனும் இன்சொலானும் சிறந்த செருந்தை என்பான் சோழர் உறையூரில் வாழ்ந்தது புலனாதல் காண்க. இனிப் பிற்காலப் பாடல்களில் (வச்சத் தொள்ளாயிரம்) இவர் வத்தவர் (வத்ஸ தேசத்தார்) என வழங்கப்பட்டா ராயினும், சங்கத் தொகை நூல்களில் இளங்கோசர் என்றே பாடப்படுதலான் இவர் கோசத்தை (கோசாம்பியை)த் தலை நகராகக் கொண்ட வத்த நாட்டிற் புகுதற்கு முன்னே கோசர் என்ற பெயருடன் இருந்தவர் தாமென்று துணி