________________
64 தமிழகக் குறுநில வேந்தர் மாறாள் (அகம்.262) என்பதனால் உய்த்துணரலாவது.. இவரை ஒன்று மொழிக் கோசர் என்பது. இருவருள்ளமும் ஒன்றாதற்குரிய வாய்மை மொழியைக் கோச முறையில் மேற்கொள்பவர் என்று பொருளாதல் கண்டு உண்மை யுணர்க. 'கோச நாடு' எனப் பெயரிய சுனைத்தடம் காச் மீர நாட்டிலுண்டு. இவற்றால் காச்மீரத் துவாரவதிவிட்டு வேளிர் தென் னாடு புகும்போதே அவர் கூடவே ஆண்டுள்ள கோசமுறை வீரரும் வந்தனர் என்று கொள்வது பொருந்தும். சான் றோர் பாடல்களிற் கோசர் வரலாறும், வேளிர் வரலாறும் சேரக் காணப்படுதலான் இவ்வுண்மை எளிதினறியலாம். வேளிர் கொண்கானத்தும் கோசர் அதன்கண் ஒரு பாலாகிய துளு நாட்டிலும் இருத்தல் சான்றோர் செய்யுட் களிற் கேட்கப்படுதலானும் இத் துணிபு வலியுறுமென்க. இக் கருத்திற்கேற்பக் கொள்ளின் கோச வீரர் காச்மீரத்து நின்று முன்னரே தென்னாட்டிற் குடியேறியிருந்தனரென் றும், பின்னர்த் தம் இனத்தவரிருக்கும் அத் தென்னாட்டே வத்தவ நாட்டுக்' கோசரும் வந்துறைந்தன ரென்றும் தெளிவது மொருத்தமாகும். இனி இவரை அசோக சக்கரவர்த்தி தென்னாட்டுள ராகச் சிலையிலெழுதிய ஸதீய புத்ரர் என்று நினைப்பாரு முண்டு. அச்சிலை யெழுத்துக் குறித்த ஸதீய புத்ரர் வேள் புலவரசரல்லது வேறாகாரென்று வேளிர் விளக்கத்துச் செவ்வனங் கூறினேன். ஸதீய புத்ரர் என்பதனை ஸத்ய புத்ரர் என்று பிறழப் படித்த தடுமாற்றத்தால் இக்கோசரை வாய் மொழிக் கோசர் என்பது கருதி அம் முடிபிற்கு வந்தாருண்டு. சிலையில் ஸதீயபுத்ரர் என்றிருப்பது பல்லோரான் நன்கு விளக்கப்பட்டதனால், இக் கொள்கையின் தவறு புலப்பட்டதென்க. இதனாற் கோசர் ஸதீய புத்ரர் எனப்.