________________
vii அமர்ந்தார். இவர் தமிழார்வத்தினால் பெரிதும் ஊக்கப் பட்டு, இவர் மாணவர்களில் பலர், தமிழையே வாழ்க்கைத் துணையாக எடுத்துக் கொண்டார்கள். இக்காலத்தில்தான் டாக்டர் ஐயரவர்களுடன் குடந்தையில் தொடர்பு ஏற்பட் டது. இருவருக்கும் சங்க நூல்கள் பதிப்பிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. இராமநாதபுரம் சேதுபதிகள் தமிழை நன்கு வளர்த்த வள்ளல்கள். நவராத்திரித் திருவிழாவில் பல புலவர் களையும், அருங்கலைவிநோதர்களையும் அழைத்துப் பரிசுகள் வழங்குவதுண்டு.பாஸ்கர சேதுபதி தம் அவையில் அமர்ந்திருந்த இராகவய்யங்காரின் புலமையில் ஈடுபட்டு அவரைத்தம் சமஸ்தான வித்துவானாக இருக்கப் பணித்தார். இதுபோலவே இசைத்துறையில் தேர்ந்த உப பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் சமஸ்தான வித்துவானாக சரிக்கப் பெற்றார். சுவாமிவிவேகானந்தர் சிகாகோ செல்ல விரும்பிய பொழுது பலநாட்கள் இராமநாதபுரத்தில் தங்கி சேதுமன்னரின் பொருளுதவியால் அமெரிக்கா சென்றார். அவர் அவைக்களப் புலவர்களோடு இந்து சமயம் பற்றிய சர்ச்சைகள் பல செய்து இன்புற்றது உண்டு. சேதுபதியின் உறவினரான பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை 1901-ல் நிறுவி இராகவய்யங்காரைச் 'செந்தமிழ்” என்னும் ஆராய்ச்சி இதழுக்கு ஆசிரியராக்கினார். இதன் மூலம் தமிழன்னை பெற்ற ஆராய்ச்சி முத்துகள் எண்ணிலடங்கா. விஞ்ஞான- பகுத்தறிவுக்கு ஏற்ப தமிழாராய்ச்சி செய்தற்குத் தம் கட்டுரைகளின் மூலம் இலக்கணம் வகுத்தார். கம்பர். திருவள்ளுவர், சங்ககாலச் சான்றோர் வரலாறுகள், ஊர்கள், நூல்களின் ஆசிரியர் பெயர்கள் தமிழுலகுக்குத் தெரிய ஆரம்பித்தன. எல்லாவகை அபிப்பிராயங்களுக்கும் டம் அளிக்கும் இதழாகத் திங்கள்தோறும் வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப்பின் தம் தாய் மாமன் மைந்தரும்'