பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராகவய்யங்கார் 81 நறவு-ஓரூர்; அயிரை - ஓர்மலை; குதிரை - ஒரு மலை; செருப்பு-ஒரு மலை; தோட்டி-ஒரு மலை ; (இஃது அங்குசகிரி என்பது; ஓசூர்ப்பற்றில் உள்ளது) என அறிதல் போல ஈண்டுத் தும்பை துரோண குலம் என்று கொள்க. தும்பை வயவர் துரோண வீரர். இக்கடற் பிறப்பிற் கியையவே இப்பல்லவர் திருக்கடன்மல்லையிற் றங்குல முதல்வனான இறைவனுக்குச் சலசயனக் கோயிலாக்கி அதற்கு நீர்ப்பாயலெனப் பெயரிட்டு வழங்கியது இந் நூலான் உய்த்துணரப்படுதல் நோக்குக. “நீர்ப்பாயற் றெல்லை போகி" என வருதல் காண்க. பட்டினம். நீர்ப்பாயற்று-சல சயனத்தையுடைய எ.று.இதனை மாற்றித் தலசயனமாக்கியது பிற்காலத் தென்று கொள்க. நீரரமகளாகிய கிருதாசியின் மகனான துரோணனைத் தீயிற் பிறந்த திருஷ்டத்துய்மன் கொன் றான் என்னும் பாரத கதையும் இப் பல்லவர்க்குள்ள நீர்த் தொடர்பை நன்கு விளக்குதல் காண்க, நீர்க்குடிக்கும் தீக்குடிக்கும் உள்ள பகைமை காட்டுவ திஃதென்க. இவற்றிற்கேற்ப இந் நூலுள் பல்லரசரும் இவனை அடைதலைக் கூறியவிடத்துக், கல்வீ-ழருவி கடற்படர்த் தாங்கு என்பதனால் இவனைர் கடலோடு ஒப்புக்கூறுதலும்; இவன் ஒளியை மிகுத்துக் கூறிய இடத்துக் குரைகடல் வரைப்பின் முந்நீர் நாப்பன் பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு என்பதனாற் கடலிற் பிறந்த ஞாயிற்றிற்கு ஒப்பக் கூறுத லும் வந்தன என்று இயைபுட நினைத்தல் தகும். பாரஸீகர் தீ வழிபடுவோரும், நீர் வழிபடுவோரும். ஆகி இருவரும் தம்முட் பகைமைகொண்டது மேனாட்டுச் சரிதங்களிற் கண்டது. (Herodotus)