________________
viii தமிழ்ப் பெரும் புலவருமான மு. இராகவய்யங்காரிடம் ஆசிரியப் பொறுப்பை அளித்தார். மீண்டும் சமஸ்தான அவைக்களப் புலவரானார். சேது, அண்ண 'ணா மலை நகரில் 1935 ஆம் ஆண்டு தமிழா ராய்ச்சிப் பகுதி திறக்கப்பட்டு, அப்பகுதித் தலைவராக நியமிக்கப் பெற்றார். இதுவரை சொந்த முயற்சியால் நூல்கள் வெளியிட்டும், சொற்பொழிவுகள் புரிந்தும் தமிழுக்கு தொண்டு புரிந்தவர்க்கு இப்பதவி மூலம் மிக விரிவாகத் தமிழாராய்ச்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. தம் 65 ஆம் வயதில் அளிக்கப்பெற்ற பெரும் பொறுப்பை மிகச் சிறப்பாக ஆறு வருடங்கள் நிறைவேற்றினார். இக் காலத்தில் இவர் செய்த சொற்பொழிவுகளைக் கேட்டு மயங்கியவர்களில் டி.கே.சி., ராஜாஜி, சத்தியமூர்த்தி, நீதி பதிகள், அறிஞர் அண்ணா நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பலர். தமிழ் வரலாறு, பாரிகாதை, தித்தன், கோசர், பட்டினப்பாலை உரை, பெரும்பாணாற்றுப் படை ஆராய்ச்சி, அபிஜ்ஞான சாகுந்தலம் ஆகியன இந்த ஐந்தாண்டுகளில் வெளியானவை. குறுந்தொகை விளக்கத்தின் ஒரு பகுதி பின்னர் பதிப்பிக்கப்பெற்றது. மாதம் இவ்வாறு தென்னாட்டுத் தமிழ்த்திலகமாய் விளங்கிய புலவர் பெருமான் 1946ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் தமது 77ஆம் வயதில் தம் இராமநாதபுரத்து இல்லத்தில் காலமானார். அவரால் வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், தனியே கொடுக்கப்பட்டுள்ளன. பரிமேலழகரை 'ஈசனதருளால் உய்த்து உணர்வுடைய வோர் உண்மையாளன்” என்பர். அத்தகைய “அநுக்ரக சக்தி" இம் மகாவித்துவானிடம் அமைந்திருந்தது. "" இவர் சுதந்திரமான சிந்தனையாளர். விஞ்ஞான பூர்வ மான தமிழாராய்ச்சிக்கு வழி வகுத்தவர். மாற்றுக் கருத் துக்கு-மதிப்புக்கொடுத்து, அதைப் பலரறிய ஒத்துக் கொள்ளும் பெரும் உள்ளம் உண்டு. நச்சினார்க்கினியர்.