பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

வண்ண வண்ண ஆடைகள் அணிந்திருப்பர். அரைக்கு வேட்டியும் தலைக்குத் தலைப்பாகையும் அணிந்து அழகாகத் தோன்றுவர். கழுத்திலும் இடுப்பிலும் பூமாலைகள் அணிந் திருப்பர்.உடல் முழுவதும் சந்தனம், குங்குமம் ஆகியவறறைப் பூசியிருப்பர். சங்கு. பவளமாலைகளும் கழுத்தில் பூண்டு கொள்வர். அவர்கள் இறைவழிபாட்டுக்குரிய தோற்றங் கொண்டு இறையருளை வேண்டி பக்திப் பாடல்களையே பாடு கின்றனர்.

இசைப் பாடலுக்குத் துணையாகப் பலவிதமான வாத்திய கருவிகளையும் இசைக்கின்றார்கள். உடுக்கை, டோலக், மத்தளம், சுருதி,தாளம் கிய கருவிகள் தாள இசைக்கு உதவு கின்றன. அவற்றைக் கூட்டாக முழக்கி இசைப் பாடல்களைப் பாடி பொடிகழியாட்டம் ஆடி இறைவனை இந்த மக்கள் வழிபட்டு அருள் வேண்டுகின்றனர். இதில் கலையும் உள்ளது. பயனும் உள்ளது. கிடைக்கிறது.

மி

இயல்பான இன்பக் களிப்பு மிகுதியாகக்

தமிழ் நாட்டு ஆடல்களில் கும்மிக்கு உறுதியாக மிக முக்கிய மான இடம் உள்ளது. ஆந்திரநாட்டுக் கொப்பிக்கும் கேரள நாட்டுக் கைகொட்டிக் களிக்கும் மிகவும் சிறந்த தொடர்பு உண்டு. கன்னட நாட்டிலும் இத்தகைய ஆடல் நடைபெறு கிறது. இதை நோக்கினால் திராவிடப் பண்பாட்டுடன் கலந்த கலையாகக் கும்மியைக் கருத இடம் உள்ளது. ஆயினும் குஜராத் நாட்டில் நடச்கும் கர்பா நடனமும் ராஜஸ்தானில் உள்ள கும்மார் ஆடலும் கும்மியுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இது பண்பாட்டுக் கலைப்பாட்டால் ஏற்பட்ட கலைப் பரிமாற்றமா என்று சிந்திக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஆண்கள் கலந்து கொள்ளும் கும்மியும் பெண்களுக்கு உரிய கும்மியும் வேறு வேறாக உள்ளன. ஆயினும் பெண்கள் கும்மிக்கே உயர்வும் சிறப்பும் கொடுக்கப் பெறு கின்றது. பெண்கள் வட்டமாக ஒரு விளக்கைச் சுற்றி நின்று கும்மியடித்துப் பாடுவது கண்ணுக்கும் காதுக்கும் மிக்க இன்பம் தருவதாக அமைகிறது. அதனையே மக்கள் மிகவும் விரும்பி. வரவேற்கின்றனர்.