பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

போது அனைவரும் முளைப்பாரியை எடுத்து ஆற்றில் அல்லது குளத்தில் விட்டுவிடுவர்.

கும்மியடிக்கும் போது பாட்டின் முதலடியைத் தலைவி பாடுவாள். மற்றவர்கள் அவளைத் தொடர்ந்து கூடியாடிப் பாடுவர் சில சமயம் எதிர் பாட்டும் பாடுவது உண்டு. மனிதனுக்கு முனைப்பு மிஞ்சி எதிர்ப்பாற்றல் எழுவது இயற்கை என்பதற்குச் சான்றாகவே இத்தகைய எதிர் பாடல்கள் எழுகின்றன. அடுத்தவரை மிஞ்சி தான் தலை நிமிர வேண்டும் என்று கருதுவது மனிதனின் இயல்பு உணர்ச்சியாகவே உள்ளது.

கதைப் பாடல்கள் பல பாடப்படும். கும்மிப் பாடல் வழி பாடு கருதியே உருவாக்கப் பட்ட கலையாகும். கால மாற்றம் பலவிதமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்ட தெய்வக் கதைகள் விளக்கப்படும். தனிப்பாடல்கள் இசைக்கப் படும். அவையே மிகுதியாக இடம் பெறும். கதைகளில் வரும் பாத்திரங்களுக்குத் தக்கவாறு ஆடை அணிகள் பூண்டும் கும்மியில் ஈடுபடுவது உண்டு.

ஆடும்போது வட்டமாகச் சுற்றி நின்று கைகளைக்கொட்டிப் பாடுவர் கையடியில் விரல் தட்டு, உள்ளங்கைத் தட்டு, அஞ்சலித் தட்டு, முழுக்கைத்தட்டு என்று பல விதம் உள்ளன. கால்களில் சதங்கை கட்டித் தாளவொலி காட்டுவர். தாளங் களைக் கட்டத்துக்குக் கட்டம் மாற்றிச் சுவையைப் பெருக்குவர் அவ்வாறு செய்யும் போது முழுப்பாதம். தரையில் படல், கட்டை விரல் மாத்திரம் படல், முன்னங்கால் படல், பலவிதம் உண்டு. ஆடும் போது மேலும் கீழும், இடமும் வலமும் இடையுமாகக் கையை நீட்டியும் சுருக்கியும் கும்மி யடிப்பர். அவர்கள் குனிந்தும் நிமிர்ந்தும் வளைந்தும் :திரும்பியும் ஆடுவது பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும் சில சமயம் குதிக்கவும் துள்ளவும் செய்வர்.

என

கால ஓட்டத்தில் கும்மிப் பாடல்கள் தமிழில் ஒருவகையான தனி இலக்கியப் பிரிவாகவே வளர்ந்துள்ளன. அரிச்சந்திரன் கும்மி, வள்ளியம்மன் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, பஞ்சபாண்டவர் வைகுந்தர் கும்மி என்று பல கும்மிப்பாடல் நூற்கள் எழுதப்பட்டுள்ளன. இவை தவிர நபியுல்லாக்

காரணக் கும்மி, ஞானவுபதேசப் பேரின்பக் கும்மி போன்ற இஸ்லாமியக் கிறிஸ்தவக் கும்மிப் பாடல்களும் உள்ளன. சமூகத்தைச் சித்திரித்துக் காட்டும் விலைமாதர் கும்மி