பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




87

அரசியலை அடிப்படையாகக் கொண்ட இண்டியா சக்கர வர்த்தினி விக்டோரியா இராஜாத்தியின் திருமுடி, ஜூபிலித் திருநாள் கும்மிப் பாடலும் பாடப் பெற்றுள்ளன. இத்தகைய கும்மி இலக்கியங்களை கும்மியாகிய நாட்டுப் புறப் பாடல் களின் வளர்ச்சியால் கிளைத்துச் சீர்திருந்திய வடிவங்களாகக் கருதலாம். நாட்டுப் புறப்பாடலில் தோற்றக் கருவும் இலக்கியத்தில் வளர்ச்சியின் வடிவம் அமைந்துள்ளன

கும்மிப் பாடல் பெண்களுக்கு உரிய கலையாகவே இருந்துள்ளது.

'வாருங்கடி தோழிப் பெண்களா

மகிழ்ந்து கும்மி யடித்தாடச் சேருங்கடி பெண்களெல்லாம் 1

என்ற பாடலில் பெண்களை மட்டும் கும்மியடிக்க அழைப் பதைக் காணலாம்.

'சித்தம் மகிழ்ந்திந்த சரிதை கேட்டிருந்த தேவிமார் வாழத் தினம் வாழி

என்ற பாடலில் பெண்களே கும்மிப் பாடலைக் இன்புற்ற குறிப்பு காணப் படுகிறது.

(சண்டை

கேட்டு

'சண்டைக் கும்மி' என்ற ஒரு வகைக் கும்மியும் உள்ளது. இது இன்பத்தைத் தருவதுடன் பெண்களுக்கு உடற்பயிற்சி முறைகளையும் விளக்கிக் காட்டும் பாடல்களாகும். கும்மிப் பாடல்கள் அன்றாட வாழ்க்கையில் நிகழும் நீரிறைத்தல், பாத்திரம் துலக்குதல், சோறு சமைத்தல், அரிசி அரைத்தல் முதலியவற்றையும் பாடலாகவும் ஆடலாகவும் விளக்கிச் காட்டுகின்றன. கோலமிட்டுக் களிக்கும் பெண்களும் கும்மிப் பாடலைப் பாடுவதாகக் குறிப்பு கிடைக்கிறது.

(1

'கும்மி யடிப்போம் கும்மி யடிப்போம் கோலத்தைச் சுற்றிக் கும்மி யடிப்போம் அழகிய கோலத்தைப் போலவே நாமும் ஒன்றாகச் சேர்ந்து கும்மி யடிப்போம்.'3 / சுபத்திரை மாலையிடு நாடகம், நாயகர்

கர் அண்ட் ஸன்ஸ், (சென்னை.

பில்லை) பக்.9.

பதி. பி. இரத்தின ஆண்டுகுறிப்

(2) சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கும்மி, பதி. ஆர்.ஜி.பதி கம்பெனி, (சென்னை, 1974) பாடல் 148 (3) ஸ்ரீமகள் கோலச்சித்திரம், (சென்னை 1963) பக் . !