கிருஷ்ணன்
ஆட்டம்
88
கடவுளரைப் போன்று வேடமிட்டு அவரைத் தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கமும் தமிழ் நாட்டில் இருந்துள்ளது. இது பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் மிகத் தெளிவாகக் காணலாம். அங்கு பாலை நில மக்கள் ஒரு பெண்ணுக்குக் கொற்றவைக் கோலமிட்டு வணங்குவதைப் பார்க்கலாம். அவள் குறி சொல்லும் திறமுடையவள் என்ற குறிப்பும் காணப்படுகிறது. மனிதரின் மேல் தெய்வமேறுவதை நம்பும் மக்கள் இவ்வாறு கோலமிட்டு வழிபாடு செய்கிறார்கள்.
தமிழர் வணங்கிய முக்கிய கடவுள்களில் ஒருவராகக் கண்ணனைக் குறிப்பிடலாம். அவர் போன்று வேடமணிந்து ஆடுவதை நாட்டுப்புறங்களில் காணலாம். கண்ணன் புல்லாங் குழல் ஊதுவது போன்று அந்தக் கலைஞர் ஆடுவார். அவருடைய தலையலங்காரம் கண்ணனைப் போன்றிருக்கும். தலையில் ஒரு மயில் பீலி அசைந்து கொண்டிருக்கும். பட்டு பீதாம்பரத்தைப் பஞ்சகச்சமாகக் கட்டியிருப்பார். கழுத்தில் பூமாலையும் பவள் மாலைகளும் புரளும். கண்ணனே தங்கள் மத்தியில் தோன்றி யிருப்பதாகக் கருதி வணங்குவர்.
மயிலாட்டம்
கண்ணன் ஆடும்போது சில கோபிகை மா தரும் அவருடன் இணைந்து ஆடுவதாகவும் ஆடல் நடக்கும். இப்பொழுது இந்த ஆடலின் மதிப்பு குறைந்துவிட்டது. விழாக் காலத்தில் அம்மன் தெருவலம் வரும்போது நடைபெறும் ஆலியாட்டம் போன்றவற்றுடன் கிருஷ்ணன் ஆட்டமும் இணைந்து நடைபெறுகிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் படும் ஆய்ச்சியர் குரவையின் தொடர்ச்சியாகக் கிருஷ்ணன் ஆடல். வழிவழியாக நடத்தப்பெற்று இந்த நிலைக்கு வந்திருக்கலாம். இன்று இந்த ஆடல் சிறப்பிழந்து விட்டதாகத் தோன்றுகிறது.
தீ மிதித்தல்
கருது
நெருப்பைத் தூய்மையின் அடையாளமாக மக்கள் கிறார்கள். தீதும் பாவமும் அழிய நெருப்புக் குளிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. தூய்மையை உலகுக்கு அறிவிக்க நெருப்பு மூழ்கி வெளிவர வேண்டும் என்ற குறிப்பு பழங்கதை களில் இருப்பதைச் சிந்திக்க வேண்டும். கற்பு நிலையில் தடம்புரண்டுவிட்டதாக ஐயப்பட்ட பெண்களின் உண்மை