93
வதற்காக உடுக்கை. பம்பை முதலிய கருவிகளை முழக்கிப் பூசனை செய்வர். ஆண்களும் பெண்களும் கூடி ஆடுவார்கள். மிகுதியாகப் பெண்களே ஆட்டத்தில் கலந்துகொள்வர். இறை யருள் தங்களுக்கு வாய்க்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஒருவரின் மேல் தெய்வமேறி அவர்கள் முன்னால், ஆடுவது வரை வரவழைப்புப் பாட்டு பாடப் பெறும். மேள மடிப்பவர்களே மூன்று அல்லது நான்கு பேராகச் சேர்ந்து வர வழைப்புப் பாடல்களைப் பாடுவர். வேண்டிக் கொள்வோர் ஆவலுடன் தெய்வ வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய வழிபாட்டு முறை நடைபெறுகிறது.
பாகவத நடனப்
கண்ணனை வழிபடுவோர் பாகவத நடனத்தை ஆடுவர். பாகவதர், ஹரிபக்தர் இதில் கலந்து கொள்வர். கிருஷ்ணன் கோபிகையருடன் ஆடுவது இந்த நடனத்தின் வாயிலாக விளக் கப் படும். ராதா கிருஷ்ணன் ஆடலும் இடம்பெறும். கோயில் அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து அதைச் சுற்றி ஆடுவது வழக்கம். ஒரு கையை அல்லது இரு கைகளையும் தூக்கியவாறு வலமாகச் சுற்றி வந்தவாறு ஆடுவர் இராமநவமி, கோகு லாஷ்டமி நாட்களில் சிறப்பாகப் பாகவத நடனம் ஆடப்படு வதைக் காணலாம். ஆன்மா இறைவனுடன் ஒன்றுவதை இந்த ஆடல் விளக்கும். இதனைக் கிருஷ்ண சைதன்யர் ஓர் இயக்க மாக நடத்தியதாக அறிய முடிகிறது. அவ்வாறாயின் இதனை நாட்டுப்புறக் கலைகளுக்குள் அடக்குவது பொருத்தமாக அமையாது. இருப்பினும் இந்த நடனம் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் மக்கள் விரும்பும் கலையமைப்பில் நடைபெறு வதினால் அந்த இயல்புகளைப் பெற்று விளங்குகிறது. திருத்தம் பெற்ற நடனங்களின் தன்மை இதற்கு இல்லை. நாட்டுப்புற மக்களே பெரும்பாலும் இதை ஆடுகின்றனர். இறை வழிபாடே. பாகவத நடனத்தின் முக்கியமான நோக்கமாக உள்ளது.
திரு நடனம்
திரு நடனத்தை நெல்லை, குமரி மாவட்டங்களில் வாழும் வைகுண்ட சுவாமி பக்தர்கள் இன்றும் ஆடி இறைவனை வழிபடு கின்றனர். வைகுண்டமடைய நாராயணரை வேண்டி உலகினர்