பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




95

நடனங்களை ஆடுகின்றனர். மேல் நாடுகளில் மேபோல் (Maypole) என்று அழைக்கப்படும். நடப்பெற்றுள்ள கம்பைச் சுற்றி ஆடும் வழக்கம் உள்ளது. வழிபாடு நடத்த இவ்வாறு சுற்றிச்சுற்றி வலமாக வந்து நடனம் ஆடும் வழக்கம் உலகத்தின் பல பகுதிகளில் இருப்பதைக் காண முடிகிறது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

விலங்கினங்களின் உருவைத் தாங்கி ஆடும் பலவிதமான ஆடல்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றில் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை மிகச் சிறப்பாகக் கூறலாம். அதைப் புரவி யாட்டம் என்றும் சில இடங்களில் அழைக்கிறார்கள். கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் இந்த ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சமூகச் சிறப்புடைய சில கொண்டாட்டங்களி லும் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை இக்காலத்தில் நடத்து கிறார்கள்.

ஒரு குதிரையின் உருவத்தை அட்டைகளாலும் மூங்கில் கீற்றுக்களாலும் செய்து அதைப் பல வண்ணத் துணிகளால் ஒப்பனை செய்வார்கள். கால்களை இணைப்பது இல்லை. அட்டைக் குதிரையின் முதுகுப் பகுதியில் ஒரு மனிதன் நிற்கும் அளவுக்குக் கூடாக இடம் விட்டு வைப்பர். அதற்குள் ஆட்டம் ஆடுபவர் புகுந்து நின்று குதிரையைப் பிடித்திழுத்து ஆடுவார். மரக்கட்டையால் செய்த கால்களைத் தன் கால்களுடன் இணைத்துக் கட்டிக்கொள்வார். அதைக் கொண்டு தரையில் உதைக்கும்போது குதிரையின் குழம்பு ஒலி கேட்கும். குதிரையைக் கடிவாளத்துடன் பிடித்து சவுக்கால் அடித்தும் ஆடுவதைக் காணலாம். ஆட்டத்தில் மெய்ம்மை காட்டும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுவதாகக் கருதலாம். ஆடுபவரின் காலில் சதங்கை கட்டியிருப்பதால் அதன் இனிய வொலி தாள இசை எழுப்பியவாறு இருக்கும். சில சமயம் ஒரு வாளை கையில் பிடித்தவாறும் குதிரையில் அமர்ந்திருப்பர்.

பொய்க்கால் குதிரையாட்டமாடுவதற்காக முன்பு குந்தளம் என்ற கருவியால் இசை எழுப்பியுள்ளனர். இக்காலத்தில் பெரும்பாலும் பாண்டு மேளம் கொட்டப்படுகிறது. சில சமயம் நையாண்டி மேளமும் அடிக்கப் பெறுகிறது. ஆனால் அது அவ்வளவு பொருத்தமாக இந்த ஆட்டத்துக்கு அமையவில்லை. மேள இசைக்கு ஏற்றவாறு குதிரைத் துள்ளுவது போன்ற நிலையில் அட்டைக் குதிரையை ஆட்டி அசைத்து ஆடுவர்.