இது
96
ஊமை நடனமாகவே நடத்தப்படுகிறது. புராணக் கதைகள் வரலாற்று நிகழ்ச்சிகளையும் புரவியாடல் மூலம் நடித்துக் காட்டுவதும் உண்டு.
தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தஞ்சாவூரில் மராட்டிய கலைஞர்களால் பொய்க்கால் குதிரையாட்டம் நடத்தப் பட்டதாக அறியலாம். இந்த ஆட்டத்துக்குத் தஞ்சாவூர் மன்னர்களின் சிறந்த ஆதரவு இருந்துள்ளது. சிவாஜியின் வீர வரலாற்றை விறுவிறுப்புடன் நடத்திக் காட்டியுள்ளனர். சிவாஜி மன்னன் பவானி தேவியைப் பணிந்து வழிபடும் காட்சியும் பகைவர்களை முறியடிக்கும் வீரகாட்சிகளும் சிறப்பாகக் காட்டப்படும். பவானி அன்னை சிங்க வாகனத்,ல் வந்து சிவாஜிக்கு அருள் செய்யும் காட்சி இணைந்து நடை பெறுவது மிக நன்றாக இருக்கும்.
ஓரிடத்தில் குதிரையில் அமர்ந்திருப்போர் சிவபெருமானின் வேடம் தாங்கி வந்து ஆட நடித்தார். சிவனுக்கும் குதிரைக்கு முள்ள தொடர்பு அறிய முடியவில்லை எந்த நிகழ்ச்சியையும் இந்த ஆடல் வாயிலாகக் காட்டலாம் என்றும் கருதியிருக்கலாம். கேரள நாட்டுக் 'கதகளி' பஞ்சாப் நாட்டுக் 'கதக்' ஆகிய வற்றின் நடனக்கூறுகளும் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவில் நடக்கும் குதிரை நடனத்துக்கும் பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறமுடியவில்லை. இரண்டும் நிறைய வேறுபாடுகளுடன் நடத்தப்படுகின்றன. ஆந்திர நாட்டுக் குதிரை நடனத்தில் உண்மையான குதிரைகள் பயன்படுத்தப் படும். திருமணவிழாவில்தான் இந்த ஆடல் நடைபெறும். ஒரு பெண்ணே முக்கிய பங்கு ஏற்று ஆடுகிறாள். பொய்க்கால் குதிரையாட்டத்தைப் பெண்களும் தமிழ் நாட்டில் ஆடுவது உண்டு. இரண்டு குதிரைகளில் ஒன்றைப் பெண்வேடதாரி அமர்ந்து ஆட்டுவார்.
ஆடல்
தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆதரவு கொடுத்து வந்ததால் வீர சிவாஜியை நினைவு படுத்துவதற்காக இந்த ஏற்பட்டதா என்பது சிந்திப்பதற்கு உரியது. அவ்வாறாயின் ஆலய விழாக்களில் வழிபாடு நடைபெறும் போது இவ்வாடல் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஏன் என்ற வினா எழு கின்றன. கலைச்சிறப்பு கருதி இவ்வளவு சிறப்பு கொடுக்கப் படுமா என்பதையும் ஆராயவேண்டும். குதிரைக்கும் சமயத் துக்கும் உரிய தொடர்பைப் பற்றிச் சிந்திக்கலாம்.