98
தீய ஆவிகளைத் துரத்துவதற்காகவும் தொத்து நோய்களைத் தடுப்பதற்காகவும் தெய்வங்களுக்கு வழிபாட்டுக் கொடையாகக் காளை, குதிரை ஆகிய விலங்குருவங்களை நாட்டுப்புற மக்கள் மிகுதியாகக் கொடுத்துள்ளனர்." இவை அனைத்தையும் இணைத்துக் காணும் போது குதிரைக்கும் சமயவுணர்வுக்கும் மிகுந்த தொடர்பு இருப்பதை அறியலாம். இவற்றைக் கொண்டு பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கும் நெருக்கமான சமயத் தொடர்பு இருப்பதாகக் கருதலாம்
இந்திய நாட்டில் மாத்திரமன்றி மேனாடுகளிலும் குதிரைக்குச் சமயச் சிறப்புள்ளதாகத் தோன்றுகிறது. இடைக் காலத்தில் கொண்டாடப்படும் மேநாள் (May Day) கார்னிவல் விழாக்கள் (Carnival Festival) ஆகியவற்றில் குதிரைகள் கொண்டுவந்து சிறப்பித்துள்ளனர். மொரீஸ்கஸ் விழாவிலும் இவ்வாறு நடைபெறுகிறது. சாண்டியாகோ (Santiago) குதிரையேறி மூர்களை முறியடித்த நிகழ்ச்சியை
லாஸ்
மோரொஸ் (Los Moros) மக்கள் கொண்டாடுவர். இது வாடையைக் கோடை வென்றதையும், தீமையை நன்மை வென்றதையும் குறிப்பாக உணர்த்தும் உருவகக் கற்பனை என்று அறிஞர் கருதுகின்றனர்8 இங்கும் குதிரைக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் குதிரையைச் சமயத் தொடர்புடன் சிறபித்துள்ளதைக் காணலாம். தமிழ் மக்களும் அவ்வாறு உயர்வு கொடுப்பதினால் தான் புரவி யாடலை மதித்துச் சமய விழாக்களில் மிகுதியாக நடத்தி மகிழ்ந்துள்ளதாகக் கூறலாம்.
மயிலாட்டம்
மயிலாட்டம் பெரும்பாலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடக்கும் இடங்களிலெல்லாம் நடக்கும். மயில் போன்ற உருவை அட்டையில் செய்து மயிலின் வால்முடிகளைக் கட்டி அதன் மேல் நின்று ஆடுவார்கள். காலில் சதங்கை கட்டியிருப்பர். கையில் ஒரு வேல் வைத்திருப்பதும் உண்டு. முருகக் கடவுள் போன்று வேடம் புனைந்திருப்பர்.
(7) E.K. Gough, “Cults of the Dead among the Nayars', Traditional India, Ed. M. Singer philadelphia, 1959), p. 260.
(8) Maria Leach Ed, Folklore Mythology and Legend New English Library (London, 1975) p.279-280.