99
பான்ட் மேளத்துக்குத் தக்கவாறு ஆடுவர். மயில் வாயைத். திறப்பது போன்றும் கழுத்தை அங்கும் இங்கும் திருப்புவது போன்றும் அமைத்திருப்பர். மயிலுருவம் முன்னும் பின்னும் பார்ப்பதாக அசைவு ஏற்படுவது நல்ல காட்சியாக இருக்கும். ஆட்டத்தின் உயிர்த் துடிப்புக்கு அது உதவுவதாக அமையும். கயிறுகள் வெளியில் தெரியாதவாறு அந்த இயக்கம் தானாக நடப்பது போன்று தோன்றும். ஆடுபவரின் கால்கள் சில சமயம் மயிலின் கால்கள் போன்று ஒப்பனை செய்யப்பட்டிருக்கும்.
கட்டப்பட்டிருப்பதால்
மயிலில் இருந்தவாறு ஆடுபவர் பலவிதமான வித்தைகளைச் செய்து மக்களைக் கவர முயல்வார். மயில் மிரண்டு ஓடுவது போன்றும் வெகுண்டு பாய்வது போன்றும் ஆட்டப்படும். இந்த ஆடலை மக்கள் புனிதமாகக் கருதுவதைக் காணலாம். இதற்கும் முருகக் கடவுளுக்கும் தொடர்பு படுத்துவதே காரணம்: முருக வணக்கத்தின் அடிப்படையில் மயிலாட்டம் தொடங்கப் பட்டிருக்கலாம் இயல்பாகவே மயிலின் தோகையின் அழகு மக்களை மிகவும் கவரக் கூடியதாக உள்ளது.
சிம்ம
ஆடல்
சிங்கத்தின் உருவை அட்டையில் அதன் மேலிருந்து ஆடும் ஆடலாகச் சிம்ம ஆடல் அமைகிறது காளியின் வாகனம் சிங்கம். ஆகையினால் சிம்ம ஆடல் ஆடுபவர் பெரும்பாலும் காளியின் வேடத்தைப் புனைந்தே ஆடுவார். அவர் கோபங் கொண்ட பார்வையுடன் காளி மகிடாசுரனைக் கொல்லப் பாய்வது போன்று இடையிடையே பாய்வார் கையில் ஒரு வாளிருக்கும். முடி தலையில் பரப்பப் பட்டிருக்கும் சில சமயம் அசுரனாக ஒருவர் நடிப்பார். காளிக்கும் அசுரனுக்கும் நடக்கும் சண்டை நடித்துக் காட்டப்படும். அசுரன் வீழ்ந்ததும் ஆட்டம் முடிவுறும் சூலம் தாங்கியும் காளி வருவது உண்டு. சூலத்தால் குத்தப் பட்டு அசுரன் விழுவதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்வர்.
தனியாக சிம்ம ஆடல் பெரும்பாலும் நடப்பது இல்லை மயிலாட்டம் போன்றவற்றுள் இணைந்தே நடக்கும். காளியின் சீற்றப் பார்வையில்தான் இந்த ஆடலின் சிறப்பு இருக்கிறது. சிங்கம் வாயைப் பிழப்பது போன்றும் காட்டுவர். இத்தகைய ஆடல் இப்பொழுது மிகவும் குறைந்து வருகிறது. சில இடங்