பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

களில் சிங்க முகத்தைக் கட்டிக் கொண்டு ஒரு மனிதன் ஆடுவதையும் காணலாம். நரசிங்க அவதாரத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அறிய வேண்டும்.

அனுமன் ஆட்டம்

இராமாயணத்தில்

வரும் அனுமன் போன்று வேடம் புனைந்து ஆடும் அனுமன் ஆட்டம் தென் மாவட்டங்களில் முன்பு நடந்துள்ளது. இப்பொழுது யாரும் அவ்வாறு ஆடுவதைக் காண்பதற்கு இல்லை. தற்பொழுது வீட்டுக்கு வீடு பிச்சையெடுக்க வரும் குளுவர்கள் உண்மையான குரங்கை அனுமன் என்ற பெயரில் ஆடச் செய்வதைப் பார்க்கலாம். அதன் கையில் ஒரு கம்பைக் கொடுத்து ஆடச் சொல்கிறார்கள். அது கம்பில் ஏறியும் இறங்கியும் பல விதமான வித்தைகள் செய்யும் அந்த மாதிரி அதை நன்றாகப் பழக்கி இருக்கிறார்கள் அதற்குப் பட்டுச் சட்டை, பாசிப் பவள மாலைகள் இ டு அழகு படுத்தி இருப்பர்.

உண்மையான அனுமன் ஆட்டத்தில் ஒருவருக்குக் குரங்கு போன்று முகமூடியும் வாலும் கட்டி விடுவர். உடல் முழுவதும் மயிர் நீண்டு இருப்பது போன்று ஆடை அணிவர். அவருடைய ஆட்டம் குரங்கினுடைய செயலால் நிறைந்திருக்கும். பல்லை இளிப்பதும் கண்ணை உருட்டுவதும் அதிகமாக இருக்கும் என்று கூறுவர். கூடியிருக்கும் மக்கள் அம்மாதிரிச் செயல்களைக் கண்டு மகிழ்வர். சிலசமயம் குரங்குபோன்று குரலெழுப்பி மிங்கும் குதித்து ஓடுவர். அதைக் கண்டு மக்கள் ஆரவாரித்து ஒதுங்கி ஓடுவதும் உண்டு.

அங்கு

ஒரு இடத்தில் அனுமன் ஆடுபவர் ஆட்டம் நடந்த இடத் துக்குப் பக்கத்தில் நின்ற தென்னையில் ஏறி ஒரு தேங்காயைப் பறித்துப் பல்லினால் உரித்து வேடிக்கை காட்டிய நிகழ்ச்சியும் நடந்துள்ளது. எதையும் உண்மையாக, நடப்பதை நடப்பது போன்று காட்டவேண்டும் என்ற ஆவலே அவரை

அவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும். ஆட்டமும் நன்றாகக் கலைத் தன்மையுடன் இருக்கும் என்று கண்டவர் கூறினர்.

தெய்வமேறி அனுமனாக ஆடும் சாமியாடிகளும் இருந்தனர். அவர்கள் அனுமன் வேடம் புனைவதில்லை. ஆனால் இராமாயண அனுமனின் வீரச் செயல்களை ஆட்டத்தினூடே புலப்படுத்துமாறு நடித்துக் காட்டுவர். சுமார் 70 ஆண்டுகளுக்கு