101
முன்னால் குமரி மாவட்டத்திலுள்ள உசரவிளை ஊரில் இவ்வாறு அனுமன் ஆட்டம் ஆடிய நாராயண வடிவுச் சாமியார் வியப்பான செயல்களை மக்கள் முன் செய்து காட்டியதாகச் சொல்லினர். கருட வாகனத்தில் திருமால் தெருவலம் வந்து கொண்டிருக்கும்போது இவர் அனுமன் ஆட்டம் ஆடி இருக் கிறார். உணர்ச்சியுடன் ஆடிய அவர் தன்னை மறந்து அனுமனாக மாறிப் பக்கத்தில் நின்ற அரச மரத்தில் துள்ளி ஏறி அதன் உச்சிக்கே போய் விட்டாராம். குரங்கைத் தாங்கும் கொம்பால் மனிதனைத் தாங்க முடியாது என்பதை மறந்து விட்டார். மிகவும் சிரமப்பட்டு அவரைக் கீழே விழாதவாறு இறக்கியிருக்கின்றனர். ஆட்டத்தை நினைத்து ஆயுளை மறந்த நாட்டுப்புறக் கலைஞரின் கலையார்வத்தை நினைத்துப் பாராட்டலாம். கலையுடன் உண்மையான உணர்வுடன் ஒன்றி விட்ட உயர்நிலையை உய்த்து உணர்வதே சிறப்பு.
இத்தகைய குரங்கு ஆடல்கள் போர்னியோவில் மக்காகு (Macaque) என்ற பெயரில் நடக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் சிலவற்றிலும் குரங்குத் தோற்ற ஆடல்கள் நடத்தப் படுகின்றன ஜவரா நடனம் (Javara) குரங்கின் செயல்களைக் காட்டும் ஆடலாக நடைபெறுகிறது. ஜப்பானில் நடக்கும் சிறப்புடைய நோ நாடகங்கள் (No Drama) சரு காகூ (Saru - gaku என்ற குரங்குத் தோற்ற ஆடலிலிருந்தும் டென் காகூ (Den-gaku) என்ற கர்ண வித்தை ஆடலிலிருந்தும் திருந்திய வடிவமாக ஏற்பட்டுள்ளது என்று கூறப்பெற்றுள்ளது'. இவற்றை நோக்கும் போது அனுமனாடலின் பெருமை புரியலாம்.
கரடியாட்டம்
கரடி
ஆகை
கரடி போன்ற முகமூடியணிந்து கரடியின் தோலை உடம்பில் முழுநிலையாகப் போர்த்திக் கொண்டு ஆடுவதைக் யாட்டம் என்று கூறுவர். கண்பக்கம் திறந்து இருக்கும். யினால் கூட்டத்தை நன்றாகப் பார்த்து ஆடுவர். பெண்களும் சிறுவர்களும் கூடியிருக்கும் பக்கத்தில் நெருங்கி அவர்களை அச்சுறுத்துவதும் உண்டு. கரடியின் முன்னங்கால் பகுதியில் கைகளைப் புகுத்தி அதை ஆட்டி அசைத்து பயம் கொள்ளச் செய்வதும் வழக்கம். கூர்மையான பற்களும் நகங்களும் அச்ச வுணர்வை மிகுவிக்கும்.
(9) Ibid, P.285.