102
கோயில் விழாக்களில் பிற ஆடல்களுடன் ணைந்து கரடி யாட்டம் நடைபெறும். சிலர் கரடி ஆடையுடன் பகலில் வீடு வீடாக வந்து பணங்காசு வாங்குவதும் உண்டு. கலையை விடவும் கரடித் தோற்றமே மக்களைக் கவரும் தன்மையதாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் கரடியாட்டம் தெய்வத் தொடர்புடன் நடத்தப் படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத் தார் வழிபடும் கரடிப் பெருமாள் தெய்வத்துக்கும் கரடி ஆட்டத் துக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை. இராமாயணப் பாத்திரமான ஜாம்பவான் கரடிவுருவம் உடையவன். அவனுக்கும் இந்த ஆடலுக்கும் உள்ள தொடர் பைப் பற்றிச் சிந்திக்கலாம்.
இந்திய நாட்டில் கரடிகள் நோய் தடுப்புக்கு உதவும் ஆற்றல் மிக்க மிருகமாகக் கருதப்படுகின்றன. குழந்தைகளின் நோயைப் போக்குவதற்காகக் கரடிகளின் முதுகின் மீது அவர்களை இருத்தி இறக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. 10 கரடிகள் சூரியனிலிருந்து ஆற்றல் பெற்று அதை மண்ணுலகுக்குத் தருவ தாகவும் நம்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள சில வீர இனத்தினரின் சின்னமாகவும் கரடி விளங்குகிறது கரடியின் இத்தகைய சிறப்புகளை நம்பிய மக்கள் இந்த ஆடலை விரும்பினரா என்பதையும் சிந்திக்கலாம்.
ரிஷய ஆடல்
காளை போன்று முகமூடியணிந்து ரிஷப ஆடல் ஆடும் வழக்கமும் தமிழ் நாட்டில் இருந்துள்ளது. இப்பொழுது இந்த ஆட்டம் மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. நந்தி தேவருக்கும் இந்த ஆடலுக்கும் தொடர்பு இருக்கலாம்.
இக்காலத்தில் உண்மையான காளைக்கு பல வண்ண ஆடை கள் போர்த்தி மணிகளும் மாலைகளும் பூட்டி வீடுகளுக்கு அழைத்து வருவதைப் பார்க்கலாம். அவற்றைக் கோயில் மாடு கள் என்று கூறுவர் மாட்டுக்கு உரிமையானவன் எதைச் சொன்னாலும் அது தலையை ஆட்டி ஒப்புதல் கூறும். ஆகையினால் மக்கள் அதனைத் 'தலையாட்டி மாடு' என்று அழைப்பர். சிலர் இடங்களில் 'பூம் பூம் மாடு' என்று கூறுவர். மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் 'அழகர் கோயில் மாடு என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. வீடுகளில் பணம் வாங்கிப்
(10) Ibid, P.124.