தெய்வமேறிய கலைகள்
தெய்வமேறிய நிலை
மனிதன் தெய்வ நம்பிக்கையுடன் அவற்றை வழிபட்டு வணங்குகிறான். தன்னைக் கொண்டே தெய்வங்களை அடை யாளம் காண முயல்கிறான். தெய்வ அருள் சில மனிதருக்கு ஏற்பட்டு அவர்கள் தெய்வச் செயல் புரியும் ஆற்றலைப் பெறு கின்றனர் என்று நம்புகிறான். மனிதனின் இயல்பான ஆற்றலை விடவும் அது மிக்காது எனக் கருதி மதிக்கிறான். ஒவ்வொரு தெய்வமும் வேறுவேறு இயல்புகளையும் ஆற்றலையும் உடையன என்று மதிப்பிடுகிறான். தெய்வக் கதைகளைக் கொண்டு அவற்றின் வாழ்க்கையின் போக்கைக் கணிக்கிறான், தெய்வமேறியவர்களைச் சிறப்பாகக் கருதி உயர்வளிக்கிறான். மக்கள் மத்தியில் மதிப்பு இருப்பதால் தெய்வமேறி ஆடும் ஆடல்கள் மிகுந்து வளர்ந்தது. ஊருக்கு இத்தகைய ஆடல்கள் வணங்கும் தெய்வங்களின் தன்மைகளுக்கும் வழங்கும் கதைகளில் போக்கும் தக்கவாறு மாறிமாறி அமைகின்றன. அவற்றில் கலைத் தன்மை அதிகமில்லை. இருப்பினும் கருவி இசைக்குத் தக்கவாறு நடைபெறுவதிலிருந்து ஓரளவு கலைத் தன்மை இருப்பதாகக் கருதலாம். மக்கள் தெய்வமேறிய ஆடல்களைக் கலையாகக் கருதாது தெய்வத்தின் அருள் வருகையாகவே மதிக்கின்றனர். அவற்றின் பல்வேறு அமைப் பையும் நிலைகளையும் கண்டறிவது நாட்டுப்புற ஆடற்கலை யின் பொதுத்தன்மையை அறியத் துணை செய்யும்.
ஊர்
இத்தகைய இறையாடலைப் பல இடங்களில் 'சாமியாட்டம்' என்று கூறுகின்றனர் அது தொடங்கும் போது உடல் அசைவாகக் காணப்படும். 'ஆராசனை' என்று கூறுவர். இது 'ஆராதனை' என்பதின் வழக்கச் சொல்லாக இருக்க வேண்டும். இறைக் கதைகள் கூறி மேளங்களை அடித்து முழக்கும் ஆட்டம்கூடும். பின்னர் எழுந்து ஆடுவார்கள். குறிப்பிட்ட தெய்வத்தின் அருளாவி அந்த ஆட்டக்காரரின் மேலேறித் தங்கள் முன் தோன்றியுள்ளதாக மக்கள் கருதுவர். பலவிதமரியாதைகள் செய்வர். பணிந்து வணங்குவர். பயந்து பணி புரிவர். இத்தகைய ஆடல்கள் நாட்டுப்புறக் கூத்துக்கலைக்குத் துணை செய் திருக்கும் என்று நம்பலாம் தெய்மேறிய ஆடல்கள் பலவித மாகத் தமிழ்நாட்டில் நடக்கிறது. இடத்துக்கு இடமும் தெய்