110
கோவை மாவட்டத்தில் கருப்புராயன், செல்லாண்டியம்மன்,
மாரியம்மன்
காட்டேரி முதலிய தெய்வங்களை வணங்கி வருகிறார்கள் அவிநாசியின் பக்கத்திலுள்ள அரசூர் கருப்புராயன் கோயில் மிகவும் புகழ் வாய்ந்தது. இங்கு நடை பெறும் விழாவும் ஆடலும் தனிச் சிறப்புடையன. கருப்புராயன் கோயிலிலிருந்து பலர் ஆடிக்கொண்டு சற்று தூரத்திலிருக்கும் கந்தசாமி கோயிலுக்கு வருவர் அங்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை செண்டை மேளம் அடிக்கப்படும். ஆடிக்கொண் டிருப்பவர். கந்தசாமிக்குக் கோபமூட்டும் முறையில் பல வற்றைச் -சொல்லி ஆடிக்கொண்டிருப்பார், பத்திலிருந்து இருபது பேர் வரை கையில் வாளை வைத்து ஆடுவது பார்க்க நன்றாக இருக்கும். தங்களைத் தாங்களே வாளினால் வெட்டிக் கொள்வர். தனித் தனியாகப் பலதைக் குறையாகக் கூறிக் கந்தசாமிக்குச் சினம் வரச் செய்து எழுப்புவர் பின் அனைவரும் மண்டியிட்டு உட்காருவர். ஒருவர் சாட்டையால் ஒவ்வருவரை யும் அடிப்பார். அடிபட்டவர் எழுந்து செல்வார். சாட்டையடி முடிந்ததும் பூசை செய்பவருக்கு அருள் வந்து ஆடுவார். குறிகளைக் கூறுவார். இவ்வாறு அவ்வூரில் சிவராத்திரி விழாவில் ஆட்டம் நடக்கும்.
பல
கருப்புசாமிக்கு மிருகங்களைப் பலியாகக் கொடுப்பார்கள் மக்களுக்குப் பல தானியங்களின் கூட்டுச் சேர்க்கையான 'பள்ளையம்' என்ற பொருளைப் 'பிரசாகமாகக்' கொடுப்பார் கள். விழா முடியும் போது பக்கத்திலிருக்கும் நீர்க் குண்டத்தி லிருந்து தீர்த்தம் (புனித நீர்) கொடுத்து அனுப்புவர். நீர்க் குண்டம் கற்களால் மூடப்பட்டிருக்கும். ஊரினர் அனைவரும் தங்களுடைய பகை, வெறுப்புகளை மறந்து ஒற்றுமையாக அக்கோயிலுக்கு விழாவெடுப்பது தனிச் சிறப்பாகும். அவ் வூருடன் இணைந்து தொடர்பாக விளங்கும் அனைவரும் தங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்குக் கருப்புசாமி அல்லது கருப்பாத்தான் என்று பெயரிடுவது இன்றுவரைப் பழக்கத்தில் இருக்கிறது.
நரசிம்மபுரம் மாரியம்மன் கோயிலில் நோன்பு சாட்டுதல் விழா எட்டு நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும் ஆண்கள் ஆளுக்கு ஒரு கலசம் கொண்டு வருவர். அதில் வேப்பயிலை இருக்கும் பெண்கள் தீச்சட்டியுடன் வந்து கோயிலில் தீபமேற்றுவர். மாவிளக்கும் வீட்டிலிருந்து கொண்டு வருவர். விழாவின் போது அனைவரும் மஞ்சள் நீராடி பலவித கேளிக்கை