பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




113

அதை வியப்புடன் அனைவருக்கும் கூறி அந்த இடத்தில் பத்திரகாளி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டி வணங்கியுள்ளனர். காய்ச்சல் போக்கிய அம்மனைக் காய்ச்சக்கார அம்மன் என்று அழைக்கிறார்கள். அது இன்று மக்களுடைய வாயில் காச்சக்கார அம்மனாக நிலைத்துள்ளது.

அக்கோயிலில் இன்றும் சிவகாசி மக்களால் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. நோய்தீர வேண்டுகின்றனர். ஆடலும் பாடலும் நடத்தி விழாவைக் கொண்டாடுகின்றனர். கதையில் வரும் வரலாற்றை விளக்கும் முறையில் முன்பு தெய்வ மேறிய ஆடல் நடை பெற்றதாகவும் கூறினார்கள். வியப்பான செய்திகள் நாட்டுப்புறத் தெய்வங்களைச் சுற்றிப் படர்ந் துள்ளமைக்கு இது ஒரு நல்ல சான்றாக உள்ளது.

நம்பிக்கைகளுடன்

பலவிதமான இவ்வித விழாக்களும் ஆடல்களும் நடக்கின்றன. தெய்வக் கதைகளுக்கும் அவர்களுக்கு மக்கள் விதித்திருக்கும் ஆற்றலுக்கும் தக்கவாறு தெய்வமேறிய வர்களில் ஆடல் நடக்கிறது. அதையே மக்கள் ஏற்றுக் கொள் கின்றனர். மீறினால் கலை குலைந்து கொலையில் போய் முடிந் தாலும் வியப்படைய வேண்டியதில்லை.

மதுரை மாவட்டத்தில் கண்ணாத்தாள் சிறந்த தெய்வமாக வணங்கப்படுகிறது. அது கண்ணகியின் மாற்றுப் பெயராக இருக்கலாம். திருச்சி தஞ்சாவூர் மாவட்டத் தெய்வங்கள் வடக்கு மாவட்டங்களில் விளக்கப்பட்டுள்ள தெய்வங்களாகவே பெரும் பாலும் காணப்படுகின்றன. வணக்கமுறையும் அவ்வாறு அமை கின்றது.ஐயனார், கருப்பர். அங்கு மிகுதியாக உள்ளனர். புதுக் கோட்டையிலும் பெரும்பாலும் அப்படியே உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கருமாரியம்மன் விழா மிகவும் சிறப்புடையது. தெய்வமேறியோர் தலையிலிருந்து கால்வரையும் கொக்கிகளை உடலில் கோர்த்து அதில் ஒரு கம்பை இணைத்து வருவது வியப் பாக இருக்கும். தன்னை வருத்தி வழிபடுவதே நோக்கம். காவேரிக் கரையோரமாகப் பலருக்குக் குடும்பத் தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இது முன்னோர் வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும். இது போன்று தஞ்சை மாவட்டத்திலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இராமநாதபுரம் மாவட்ட வணக்கமுறைக் கலப்பு காணப்படு கிறது. உடலை வருத்தி நோன்பிருந்து வழிபட்டால்தான் இறை யருளைப் பெறமுடியும் என்று மக்கள் நம்பியுள்ளனர்.