பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




117

கோயிலுக்குள் செல்ல சுவரை இடித்துள்ளனர். அது திரும்ப அடைக்கப் பெற்றிருப்பதையும் காணலாம். நால்வரையும் வெட்டிய இடங்களில் பீடமும் பூசனையும் உள்ளன. இப்பொழுது மக்கள் பரப்பாடி ஊரில்தான் வாழ்கிறார்கள். இந்தக் கதையை வில்லுப்பாட்டாக அந்தக் கோயிலில் இன்றும் பாடுகிறார்கள். உடனே நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் தெய்வமேறி ஆடுவார்கள். ஆண்கள் ஆவேசமாக ஆடுவர். திருடர்களுக்குரிய ஆயுதங்களை வைத்து ஆடுவர். கண்ணைக் கட்டிய நிலையில் திசைதெரியாது தடுமாறுவர். அவர்கள் வெட்டப்படும் பகுதியை வில்லில் பாடும்போது ஒவ்வொருவராகக் கீழே விழுந்து விடுவர். சிறிது நேரத்தில் பற்றிய தெய்வப்பிடி நீங்கிய நிலையில் எழுந்து செல்வர் பெண் தெய்வம் பின்னரும் அவலத் தன்மையும் அழும் முகமும். காட்டி ஆடுவதைக் காணலாம். சாபம் கொடுப்பதைப் பாடும் பொழுது அவள் வேகமாகச் சாடுவது அச்சமடையச் செய்யும் கடுமைத் தோற்றமாக இருக்கும். பின் அவளும் தெய்வம் நீங்கப் பெறுவாள். அதை 'சாமி மலையேறுதல்' என்று கூறுவர்.

அந்தக் கோயிலுக்கு அருகில் வீரமணி என்ற தெய்வத்துக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. அது மிகவும் உணர்ச்சியுடன் மனிதனை ஆட்டுகிறது. குறித்தும் கொதித்தும் ஆடுவர். அங்கு பேய் விரட்டல், 'கணக்குச் சொல்லல்' (குறிசொல்லல்) அனைத்தும் நடக்கின்றன. ஆடுவோர் ஒரு பிரம்பை எடுத்துத் தன்னை அடித்தும் ஓங்கி வீசியும் ஆடுவதைக் காணலாம். இந்தத் தெய்வ ஆடலுக்குக் கொட்டு மேளம் மிகப் பெரியதாக முழக்கப் பட வேண்டும்.

வில்லுப் பாட்டில் விளக்கப்படும் கதைக்குத் தக்கவாறு தெய்வமேறியோரின் ஆடல் நடிப்பாகவும் துடிப்பாகவும் அமை வதை நோக்க வேண்டும். சொல்லுங் குரலும் வில்லுப் பாட்டி லிருக்கின்றன. நடிப்பும் உணர்வும் தெய்வமேறியோரிடம் உள்ளன. இரண்டும் இணைவது கூத்துக்கலையாகும்.

தெரிசனம் கோப்பிலுள்ள ஒளவையாரம்மன் சங்கப் புலவ ரான ஒவைளயாரைக் குறிப்பிடும் வணக்கமாக உள்ளது. பூவியூரி லுள்ள. கட்டையேறும் பெருமாளும் இடலாக்குடியிலுள்ள வண்டிமலையன் வண்டிமலைச்சியம்மனும் ஆடல் பாடலுடன் வணங்கப்படும் தெய்வங்கள். பூவியூரில் ஒருவர் தெய்வமேறி