128
கலைகளின் வாயிலாகக் கண்டும் கேட்டும் சுவைப்பதில் நாட்டுப் புற மக்கள் இன்பமும் பயனும் காண்கின்றனர். தமிழ் நாட்டில் பலவிதமான தொன்ம விளக்கக் கலைகள் உள்ளன.
தேவராட்டம்
தேவராட்டம்
மதுரை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில குழுவினரால் மிகச் சிறப்பாக ஆடப்பெற்று வருகிறது. விஜய நகரப் பேரரசைச் சார்ந்து தமிழ்நாட்டில் குடியேறிய கம்பளத்து நாயக்கர்களால் இன்று பல இடங்களில் தேவராட்டம் நடத்தப் படுவதைக் காண்கிறோம். தேவாரம் எனும் வரலாற்று முக்கிய மான ஊரிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கம்பளத்து நாயக்கர்கள் வாழ்ந்துவருகின்றனர். இப்பகுதியில் இன்றும் தேவராட்டம் மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றனர். இக்குழுவினர் சக்கம்மா தேவியை வழிபடும் வழக்கமுடையவர். அந்தத் தேவியை வழிபடாமல் எந்த இடத்திலும் ஆட்டத்தைத் தொடங்குவதில்லை. கண்ணன் கோவர்த்தன கிரியைத் தாங்கிக் காப்பாற்றிய சிறுவர்களின் வழிவந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். அவ்வாறு வழிவந்த பெருமையை ஆட்டத்தின் ஊடே புலப்படுத்தி மகிழ்கின்றனர், இந்தக் கலை இவர்களுக்கே உரியது என்ற எண்ணமும் இவர்களிடம் உறுதி யாக உள்ளது.
ஆண்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர். வரிசையாக நின்று ஆடுவர். தலையில் தலைப்பாகை போல் மினுமினுப்பான ஒரு துண்டைக் கட்டியிருப்பதுடன் ஒரே மாதிரியான ஆடைகட்டியிருப்பர். முன்னால் நிற்கும் ஆடல் தலைவர் போலித் தாடியும் மீசையும் வைத்திருப்பார். சிலர் சிறு சிறு சோழிகளை அடுக்கி அவற்றைப் பல்வரிசையாக முகத்தில் பொருத்தி இருப்பர். அவரைப் பார்க்க முகமூடி அணிந்திருப்பவர் போன்று தோன்றும். அவரே பாடலைத் தொடங்கிப் பாடுவர். மற்றவர் ஆடியசைந்து தாளத்துக்குத் தக்கவாறு கையை ஆட்டிப் பாடுவார்கள். பல பாடல்களைப் பாடி இவ்விதமாக ஆடுவர். பாட்டுக்குப் பாட்டு இசையும் தாளமும் மாறி அமையும். தொன்மைக் கதை விளக்கமே இந்த ஆடலில் சிறப்பாகக் காணப் படுகிறது.
கண்ணனின் கதைகள் பெரும்பாலும் இவர்களால் பாடப் படும். பல புராணக் கதைகளையும் பாடுவர். உள்ளூர் வீரர் களின் வரலாற்றுக் கதைகளும் இடம்பெறும். கோவையில்