130
இதிகாச, புராண, வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும். மாவட்ட மக்கள் விரும்பும் கதைகளையே முக்கிய மாகப் பாடுவர் நெல்லையில் கட்டப்பொம்மனும் மதுரையில் மதுரை வீரனும் கோவையில் வள்ளி திருமணமும் பெரும்பாலாகப் பாடப்படும் கதைகள். காத்தவராயன் கதையும் சுவையாக இவர்களுடைய பாடலில் அமையும். இதிகாசங்களைப் பல இரவுகள் தொடர்ந்து பாடிக்காட்டுவதும் உண்டு. கதைகளுக்குத் தக்கவாறு ஆடலும் மாறும். காலமும் நீளும். கதைக்குத்தான் முதற் சிறப்பேயன்றி ஆடலுக்கில்லை என்பது இதனால் விளங்கும்.
ஒயிலாட்டத்துடன் சில விநோத நிகழ்ச்சிகளைச் செய்து பல விதமாக ஆடுவதும் உண்டு. கோவையில் அதனைச் சதிராட்டம் என்று கூறுவர். இதே ஆடல் சில இடங்களில் சிறிது மாறுத லுடன் நடப்பதால் அதனை 'ஒயில் கும்மி' என்று அழைக்கிறார் கள், நடைபெறும் முறைகளில் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஒயில் கும்மியின் சிறப்பை ஒரு பேசும்படப் பாட்டு விளக்கு வதைக் காணலாம்.
'தேரோடும் மெங்கள் சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்!
சக்கையாட்டம்
சக்கையாட்டம் முதன்முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிப் புகழ் பெற்று பின் திருச்சி மாவட்டத்தில் பரவி யுள்ளது. இந்த ஆட்டம் ஆடுபவர் நாலு தேக்குமரத் துண்டுகளை விரல்களுக்கிடையில் வைத்துக் கட்டியிருப்பர். அதைக் கொண்டு அடித்து ஒலியெழுப்பியாடுவதால் இந்த ஆட்டம் இப்பெயர் பெற்றுள்ளது. 'சக்கை' என்றால் மரத் துண்டுகள் என்று பொருள்படும். ஒவ்வொரு மரத்துண்டும் 7 அங்குலம் நீளமும் அங்குலம் அகலமும் உடையதாக இருக்கும்
எட்டு முதல் பன்னிரண்டு பேர் வட்டாரமாகவோ இணை கோட்டு வரிசையிலோ நின்று இந்த ஆட்டத்தை ஆடுவர். அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து காணப் படுவர். ஒரு அரைக்கால் சட்டையும் தோளில் ஒரு சதுரமான துண்டும் காணப்படும். தலையில் ஒரு கைக்குட்டை கட்டப் பெற்றிருக்கும். சதுரத் துண்டில் சிறுசிறு மணிகள் அழகாகத்