136
குடமடிப்போருடன் இரண்டாவது முறை பாடல்களைப் பாடு வோர்களை 'இடத்த பாடுவோர்' என்றும் நாட்டுப்புற மக்கள் நயமுடன் அழைப்பர். சில சமயம் வலம் பாடுவோர் பாடிய அடி முழுவதும் பாடாமல் இறுதிப் பகுதியை மட்டும் நீண்ட இசையுடன் இடம்பாடுவோர். பாடுவதும் உண்டு. வில்லுப் பாட்டைப் படித்துக் கொடுக்கும் ஆசிரியரை 'அண்ணாவியார்' என்று அன்புடன் அழைப்பர். பாடும்போது தொடக்கத்தில் குரு வணக்கமாக ‘அண்ணாவியார் பாதம் பணிந்து வில்லினில் பாட என்று கூறாமல் யாரும் பாடுவதில்லை.
சுடலைமாடன்,
முதலில் காப்பு, வாழ்த்து, வணக்கம் ஆகியவற்றை ஐயன் கதையைத் தொடங்குவர். முத்தாலம்மன், இசக்கியம்மை, மாரியம்மை, கருங்கிடாக்காரன், தோட்டுக்காரி, பூலங்கண்டாள், வெங்கலராசன், சேத்திரபாலன், பிச்சைகாலன், சேத்திரபாலன், ஐவர்ராஜா, வெள்ளைக்காரன், வல்குனி யம்மன், :சேர்வைக்காரன், உச்சினி மாகாளியம்மன், பத்ரகாளி முதலிய தெய்வக் கதைகள் தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற வில்லுப்பாட்டுக்கள். முத்துப்பட்டன், மதுரைவீரன், காத்தவராயன், கட்டப்பொம்மன், மந்திர மூர்த்தி, சின்னத்தம்பி ஆகியவை வீரக்கதைப் பாடல்கள். இவை தவிர இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் சில பகுதிகளையும் வில்லில் பாடுவது உண்டு. இக்காலத்தில் தேசிய உணர்ச்சிப் பாடல்கள், சமூகச் சீர்த்திருத்தப் பாடல்களும் பாடப்படு கின்றன.
வில்லுப் பாட்டை ஒரு பழந்தமிழ் இசைக்கலை என்று பெருமையாகக் கூறலாம். அதன் எளிமையும் இனிமையும் அனைவரையும் கவரவல்லது. போர்க் 'கருவியாகிய வில்லே இக் கலையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். வில்லின் நாணைச் சுண்டும்போது எழும் ஒலி முதலில் மனிதனைக் கவர்ந்திருக்க வேண்டும். போரில் வெற்றி பெற் றோர் வில்லைத் தட்டி இன்பக் களியாட்டம் நடத்தியிருப்பர். வீரப் பாடல்களைப் பாடி மகிழ்ந்திருப்பர். அதற்குத் துணை யாகப் போர் முரசுகளையும், கிணைப் பறையையும், மதுக்குடங் களையும் அடித்து தாளம் போட்டு மகிழ்ந்திருக்கலாம். அதனை யும் போர்களத்தில் எளிதில் கிடைக்கக் கூடியவை. பின்னர் வில்லில் இசைபெருக்க மணிகளையும் பலவித இசைக் கருவி களையும் பொருத்தங் கண்டு இணைந்திருப்பர். போர் செய்யும் வில்லின் இரு முனைகளிலும் பூண்கட்டி வீரமணிகளைக் கட்டி யிருந்தனரா என்பதையும் அறிய முயலலாம்.