138
அமையாமல் கருவிகளையும் வசதியுடன் அமைய மாற்றியுள்ளார் அம்மாற்றங்கள் வில்லுப்பாட்டின் நாட்டுப் புறப்பண்பை
மாற்றாமல் இருக்குமேயானால் நன்று.
முன்பு ஆண்கள் மட்டுமே வில்லில் பாடி வந்தனர். இப் பொழுது பெண்களும் நன்றாகப் பாடித் தங்கள் திறமைகளைக் காட்டுகின்றனர். பலர் குடும்பக் கலையாக வில்லுப்பாட்டைப் பழகி வைத்திருந்தனர். பல வீடுகளில் பழைய வில்லுகள் இருப்பதைக் காணலாம். பல கோயில்களில் ஊர்க்குழுவினரே பாடியிருக்கின்றனர். முன்பு சில கோயில் விழாக்களில் இரு குழுவினரை ஒரே சமயம் போட்டியாகப் பாடச்செய்து அவர் களுடைய திறமையைத் திறனாய்வு செய்துள்ளனர். அதற்கு "மந்திரப்பாட்டு' என்று மக்கள் பெயர் கூறுவர்.
வில்லுப் பாட்டின் பெருமையை நன்றாக அறிந்தவர்கள் நாட்டுப்புற மக்களே ஆவர். தென்மாவட்டங்களில் அம்மன் கோயில்கள் இருப்பது வரை வில்லுப்பாட்டுக்கலை நாடுப்புற அமைப்பில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
செய்த
வில்லுப்பாட்டு தமிழில் ஒரு தனி இலக்கியப் பிரிவாகக் கருதத் தக்க நிலையில் உள்ளது. அவற்றைப் பற்றிய ஆய்வு களும் செய்யப் பெற்று வருகிறது. கோமதிநாயகம் எழுதியுள்ள வில்லுப்பாட்டு ஆய்வு நூல் திறனாய்வுச் சீர்மையுடன் அவற்றை விளக்குகிறது. அகத்தீசுவரம் ஆறுமுகப் பெருமாள் நாடார் சுவடிகளில் பதுங்கிக் கிடந்த பல வில்லுப் பாட்டுக் கதைகளை அச்சிட்டு வெளியிட்டதைக் கலைக்கும் தமிழுக்கும் சேவையாகக் கருதலாம். நா. வனமாலை மதுர காமராஜ் பல்கலைக் கழகச் சார்பில் சில வில்லுப் பாட்டுகளை ஆய்வுத் திறன் மிக்க முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். அவரால் பதிப்பிக்கப் பெற்ற 'வீணாதி வீணன் கதை' ஆட்சிச் கேட்டால் விளையும் தீமைகளை நகைச்சுவையுடன் விளக்கும் தரமாக உள்ளது. இன்பக் கலையாகவும் இலக்கியச் செல்வ மாகவும் வில்லுப் பாட்டு விளங்குகிறது.
பாவைக் கூத்து
சீர்
பாவைகளை மரத்தாலும் தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆட்டியசைத்து கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப் புறக் கலைக்குப் பாவைக் கூத்து என்று பெயர். மரத்தால் ஆனவை மரப்பாவைக் கூத்தாகவும் தோலானவை தோற்பாவைக் கூத்தாகவும் வேறு