பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

கொடுத்து விடுவர். அனைவரும் உரிமையாகக் கூத்தைக் கண்டு களிக்க இம்முறை வசதியாக இருக்கும். சில இடங்களில் கூத்து நடக்கும் நாளில் வசூல் செய்யப்படும். அதற்காகக் கூத்து நடக்கும் இடத்தைச் சுற்றி கீற்று அல்லது கிடுகினால் வளைத்துக்கட்டி மறைத்திருப்பர். பாவைக் கூத்து பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும். பெரும்பாலும் இராமாயணக் கதையை முழுமையாகக் காட்டுவர். பாரதமும் சில இடங்களில் நடத்தப்படுகிறது. அரிச்சந்திரன் போன்ற நாடறிந்த கதை களையும் பாவைக் கூத்தாக நடத்தியுள்ளனர். இதிகாசப் புராணக் கதைகளை விளக்குவதுடன் மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அறிவுரைகளையும் நல்ல முறைகளில் கூறிவிடு கின்றனர். சில நகைச்சுவை பாத்திரங்கள் வாயிலாகப் பல்வற்றைக் கூறிச் சிரிப்பு மூட்டுகின்றனர். கொப்புளான், உச்சிக்குடும்பன், முளவத்தக் கண்ணன் ஆகிய நகைச்சுவைப் பாத்திரங்களைத் தமிழ்நாட்டுப்பாவைக் கூத்தில் காணலாம். கர்நாடகாவிலுள்ள தார்வார் மாவட்டப் பாவைக் கூத்தினர் அனுமநாயகா என்ற நகைச்கவைப் பாத்திரத்தைப் பயன் படுத்துகின்றனர்.

முதன்முதலில் பாவைக் கூத்து சைனாவில் நடத்தப் பட்டதாகவும் பின் அங்கிருந்து இந்தோச்சைனா வழியாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் பாவைக்கூத்து நடத்தப் பட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் பெருவாரியாக மராட்டிய கலைஞர்களே இந்தக் கூத்தை நடத்தியுள்ளனர். இராமநாதபுரம், நெல்லை, குமரி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாவைக்கூத்து பெருவாரியாக நடைபெறுகிறது.

சிறுசிறு பொம்மைகளைக் கைவிரல்களில் கட்டி அவற்றை ஆட்டுவதும் உண்டு. இக்காலத்தில் அது வழக்கிழந்த நிலையில் உள்ளது. தோற்பாவைக் கூத்தில் பல புதுமைகளைச் செய்து காட்டக் கலைஞர்கள் முயன்று வருவதினால் அது இன்றும் நிலைத்து வாழ்கிறது.

கும்பகோணத்தில் மணி ஐயர் மிகவும் புகழ்பெற்ற பாவைக் கூத்துக் கலைஞராக விளங்குகிறார். அவருடைய பாவைகள் மூன்றடி வரை உயரமுள்ளனவாக இருக்கும். அவர் பாவைகளை ஆட்டுவதில் வல்லவர். தலையில் ஒரு வட்டமான அட்டையைப் பொருத்தி அதில் நூல்களை இணைத்து கர்நாடகாவிலுள்ள