பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




143

மிடையில் இடவேறுபாட்டால் சிலவித மாற்றங்கள் காணப்படு கின்றன. ஆனால் இரண்டின் நோக்கும் போக்கும் உள்ளன.

ஒத்து

பொதுவாக ஆலயத்தின் முன்புறமுள்ள வெளிப்பகுதியில் உறியடித்தல் நடைபெறும். பக்கத்திலிருக்கும் மரத்தில் ஒரு பானை கட்டித்தொங்க விடப்படும். கண்ணனைப் போன்று வேடமிட்ட ஒருவர் கையில் நீண்ட கம்புடன் ஆடிக்கொண்டு வருவார். பானையை நோக்கிக் வீசும்போது

பானையை மேலே இழுப்பர். இபை அவர்

சமயச்

று பலமுறை இழுப்பதும் இறக்குவதுமாக நடக்கும். கண்ணன் அதை அடித்து உடைக்க முயல்வதும் முடியாமல் போவதும் காண்போருக்கு நல்ல காட்சி யாகும். இறுதியில் பானை கம்பினால் அடிக்கப்பட்டு உடைந்து விழும். ஆட்டமும் இனிது முடிவுறும். இத்தகைய சார்புடைய காட்சியைப் பின்பற்றியே பள்ளியில் போட்டியாக நடத்தப் பெறும் பானையுடைப்பு' விளையாட்டு தோன்றி யிருக்கவேண்டும். கண்ணனின் விளையாடலாக இது இருப்ப தினால் திரௌபதியம்மன் கோயில், திருமால் கோயில்களில் இது நடத்தப்படுகிறது.

தொன்மக் கதை நிகழ்ச்சியாகவே இது உள்ளது. கடவுளை நினைத்துக் காட்சியை மக்கள் கண்டு களிப்பர். இது கலை யுணர்வுடன் அமைவதையும் காணலாம்.

சூரன்பாடு

முருகக் கடவுள் ஆணவம் கொண்ட சூரனை வேலால் கொல்லும் கதையைப் புராணத்தில் காணலாம். சில முருகன் கோயில்களில் சூரனைக் கொல்லும் காட்சி ஆண்டுதோறும் கலைச்சிறப்புடன் நடத்தப்படுகிறது. வைக்கோல்

மூங்கில்

கியவற்றால் சூரனின் பேருருவத்தைச் செய்து அதற்கு மரத்தாலான கோரச் சிரிப்புடைய முகத்தைப் பொருத்தித் தெருவில் இழுத்து வருவர். மயில் வாகனத்தில் முருகனை வைத்து சூரனுக்கு எதிராகக்கொண்டு வருவர். போர் நடக்கும் முன்னும் பின்னுமாகச் சூரனின் உருவம் தள்ளப்படும். சிறிது நேரம் கழித்து சூரன் திரும்பிச் சென்று விடுவான். பின்னர் இரண்டவது வருகை தொடங்கும். முதல் வருகையில் சிரிப்புடன் இருந்த சூரனின் முகம் இரண்டாவது வருகையில் கோபமாக மாறும். போர் நடப்பதாகக் காட்டுவர். திரும்பவும் சூரன் பின் வலித்து ஓடுவதாகக் காட்சிப் படுத்துவர். மூன்றாவது வருகையில் சூரனின் முகம் சோகமாக அழுது வழியும். போர்