146
முதற்கணியானின் குலவழித் தோன்றல்களாகத் தம்மைக் கூறிப் பெருமை கொள்கின்றனர். குமரி, நெல்லைப் பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். . நாங்குநேரி வானமாமலை, பழைய பேட்டை (திருநெல்வேலி) டேப் முருகன் ஆகியோர் கணியான் குழு நடத்துவதில் பெயரும் புகழும் எடுத்துள்ளனர். இரண்டு பெண் (வேடம்) இரண்டு ஆண், ஆகியோர் இதில் பங்கு கொள்கின்றனர். பெண்வேடமிட்டிருப் போர் ஆடிப்பாடுவர். ஆண்கள் தப்பட்டை அல்லது மகுடம் கொட்டிப் பாடுவர். நால்வர் இணைந்து பாடியவாறு ஆடுவதும் உண்டு. கணியான் ஒரு கையை முகந்துநேர் உயர்த்தி மறு கையை வீசிப் பாடுவது மிக அழகாக இருக்கும். இன்னொரு வரும் அவர்களுடன் இணைந்து பாடுவதையும் காணலாம். கணியான் குழு பொதுவாக ஐந்துபேரைக் கொண்டதாக இருக்கும். அந்த ஒருவர் ஆசிரியராகவும் தலைப்பாடகராகவும் இருந்து பாடலைத் தொடங்கி மற்றவர்களை வழி நடத்துவார். கோயில் தெய்வக் கதைகளையே பாடுவர்.
ஆட்டத்துக்கு 'அச்சாரம்' (அழைப்பாணை) வாங்கியதும் பதினைந்து நாட்கள் தொடர்ந்து விரதம் காப்பார்கள். இவ்வாறு காக்கும் நோன்புகள் கணியான் ஆட்டத்தின் புனித மான தன்மையை விளக்குவதாகும். உணவு, வாழ்க்கை முறைகள், உடலுறவு ஆகியவற்றில் மிகுந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவர். விழாவின் போது ஆட்டத்தைத் தொடங்கு வதற்கு முன்பு சில சிறப்புப் பூசனைகளைச் செய்வர். மந்திரப் பாடல்களைப் பாடுவர். அத்தனையும் புனிதமான முறையில் செய்யப்படும்.
பாட்டுகளுக்குத் தக்கவாறு தாளமிட்டு ஆடுவதும், சுற்றிச் சுழன்று ஆடுவதும், பற்றிப் பிடித்துப் பம்பரமாய்ச் சுழல்வதும், துள்ளித் துள்ளிக் குதிப்பதும், திடீரென்று நிற்பதும் கணியான் ஆட்டத்தில் காணப்படும் கலைக் காட்சிகள், சாமியாடு வோருடன் சில சமயம் கணியான் போட்டியாட்டம்' ஆடுவதை யும் காணலாம். பாடல்களில் கதைகளை வளர்ப்பதுடன் மனிதவுணர்வுகளையும் புலப்படுத்திக் காட்டுவர். உச்சக்குரலில் ஓங்கிப் பாடி நள்ளிரவின் அச்சம் போக்கி அனைவரையும் இன்பப் படகிலேற்றி எழில் பயணவழி காட்டி மகிழ்விப்பதே கணியான் ஆட்டத்தின் சிறப்பாகும்.
கதை சொல்லல்
இதிகாசப் புராண கதைகளைக் கேட்டு இன்பப்படுவது மக்களின் இயற்கை. இதிகாச நாயர்களை மக்கள் தெய்வங்