148
நூற்றாண்டின் இறுதியில் உசரவிளை பொன்னணிந்த பெருமாள் நாடார் தன் வீட்டில் பதினெட்டு நாட்கள் பார்தக் கதையைச் சுவடி வைத்து படித்து விளக்கம் சொல்வதை ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இறுதிநாளில் "பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று பதினெட்டு அண்டா பாயாசம் வைத்து அனைவருக்கும் வழங்கப் படுவது இனிய செய்தியாகும். ஊர் மக்கள் ஒருங்குகூடி உவந்து பழகும் நல்ல வாய்ப்பாக அது அமைந்துள்ளது.
சமீப காலத்தில் குமரியிலுள்ள பல சிற்றூர்களில் இலைங்கையடிவிளை சிவராமப் பெருமாள் நாடாரின் இராமாயண விளக்கம் தொடர்ந்து நடைப்பெற்றது. மிக அண்மை காலத்தில் உசரவிளை வடக்கு வீட்டுப் பெருமாள் நாடார் இசையுடன் பாடல்களைப் படிக்கவும் தெங்கம்புதூர் முதுபெரும் புலவர் சாஸ்தாங்குட்டிப்பிள்ளை அரிய முறையில் விளக்கவும் இராமயணக் கதை சொல்லல் பல ஊர்களில் நடை பெற்றன. அவர்கள் இருவருடைய வாய்ப்பையும் வசதியையும் தெரிந்து ஊர் அம்மன் கொடை நாட்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு அவர்களின் 'கதைவாசிப்பு' சிற்றூர்களில் புகழ் பெற்றிருந்தது.
இதிகாசக் கதைகள் சொல்வதைத் தமிழகத்து நாட்டுப் புறமக்கள் மிகவும் விரும்பியுள்ளனர் என்பது தெளிவு, நாடெல் லாம் பரவியுள்ள கதைகளை நாடிக் கேட்டிருக்கிறார்கள். கதை மாந்தர்களை மதித்துப் போற்றியுள்ளனர். ஆண்டுதோறும் கேட்டாலும் அலுக்காது சலிக்காது அந்தக் கதைகளைக் கேட்க ஆவல் பட்டிருக்கின்றனர். வாழ்வுக்கு வழி காட்டும் மாந்தர் களாக இதிகாசப் பாத்திரங்களைக் கருதியதோடு தங்களுக்கு அருள் பாவிக்கும் தெய்வங்களாகவும் மதித்துள்ளனர். யினால் கதைசொல்லல் கலையாகி வளர்ந்துள்ளது.
ஆகை
இத்தகைய கதைசொல்லும் பழக்கத்தின் வளர்ச்சியாக அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தையும் கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர கீர்தனையையும் கூறலாம். இவர்கள் இன்னிசைப் பொழிவாக (கதா காலச்சேபம்) இந்தக் கதைகளைக் கூறியிருக்கின்றனர். அவற்றிலிருக்கும் இசையமைப்பும் இலக்கிய அமைப்பும் சிறப்பாகக் கருதத் தக்கவை. எளிமையும் இனிமையும் நாட்டுப் புற அமைப்பின் நன்கொடைகள்.