பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




159

குறிப்பிட்டுக் கூறி வருந்துகிறான். இறைவனின் புகழைப் பாடிப் பாடிப் பணிகிறான். இரக்கவுரைகளாக இவை அமை கின்றன. இனிமேல் இவ்வாறு தவறுகள் செய்வதில்லை என்று கூறி இறையருளை மேலும் மேலும் வேண்டிக் கெஞ்சு கிறான்.

கடவுளின் அருளால் கை கால்களைத் திரும்பப் பெற்றுத் திருந்திய வாழ்வில் நிலைக்கிறான். இவ்வாறு நொண்டி நாடகம் முடிவடையும் இளைஞர்களிடம் சாதரணமாகக் காணப்படும், பெற்றோர் மதியாமை, வீட்டை விட்டு நீங்கள், திருட்டு, பரத்தையர் உறவு ஆகியவற்றை வலிமையாக நொண்டி நாடகம் கண்டித்துக் கூறுகிறது. இறையருளின் ஆற்றலை விளக்கி இறையுணர்வை ஊட்ட முயல்கிறது. சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கி இறையுணர்வை வளர்த்து மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நொண்டி நாடகம் மக்கள் முன்னால் நடிக்கப் பெறுகிறது.

சமயத்துக்குத் தக்க கருத்துக்களும் தலைவனுக்குத் தகுந்த விளக்கங்களும் நொண்டி நாடகங்களில் இடம் பெறுவதைக் காணலாம். சீதக்காதி நொண்டி நாடகம் சீதக்காதி மன்னனைப் புகழ்த்து இஸ்லாம் சமயக் கருத்துக்களை விளக்குகிறது, திருச் செந்தூர் நொண்டி நாடகம் முருகக் கடவுளைப் புகழ்ந்து பாடிப் பரவுகிறது. ஞான நொண்டி நாடகம் கிருஸ்தவச் சமயக் கருத்துக்களை விளக்க முயல்கிறது. இவற்றை மக்கள் காணும் போது திருந்தும் வழியைக் காண முயல்வர். இறையுணர்வுடன் தீயதைச் செய்யாது திருந்துவர். தண்டனையைக் கடுமையாகக் கொடுப்பதால் தீமை செய்ய பெரிதும் அஞ்சுவர்.

பரந்த வெளிகளில் இந்த நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. கோயில் விழாவின்போது இது பெரும்பாலும் ஆடப்பெற்றுள்ள தாகக் கூறுவர். பல சமயத்தவர் இந்த நாடக அமைப்பைப் பின்பற்றி நூலெழுதியதிலிருந்து நொண்டி நாடகத்தின் உண்மையான சிறப்பு புலனாகும். மக்களின் சுவைத் தன்மை புதுமைகளை வேண்டுவதினால் இக்கலை இன்று வழக்கொழிந்து காணப்படுகிறது. நொண்டி நாடகம் கால உணர்வில் கரைந்து மறைந்த கலையானாலும் அது ஒரு காலத்தில் மக்களை நல்ல முறையில் மகிழ்வித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டிய ஒரு வகை நாடகக் கலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.