பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




.

161

இறைவருக்கும், மன்னருக்கும், மற்றவர்களுக்கும் தகுதிக்குத் தக்கவாறு பங்கிட்டுக் கொடுத்து மீதியைத் தங்களுக்காக ஒதுக்கி மலைக்குச் செல்கிறார்கள்.

சிங்கன் சிங்கியைத் தேடியலைகிறான். சிங்கி குறி சொல்லிய தற்காகப் பெற்ற பரிசுகளுடன் திரும்பி வருகிறாள். அவளைக் கண்டதும் சிங்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறான். இருவரும் அன்புடன் இணைந்து இன்பமாகப் பாடுகிறார்கள். அனைவரை யும் நீடுவாழ வாழ்த்தி அரங்கத்தை விட்டு நீங்குகிறார்கள். குளுவ நாடகம் முடிகிறது.

வேட்டையாடும் தொழிலையும் எளிய மலைவாழ் மக்களின் னிய வாழ்வையும் விளக்கி குறிப்பிட்ட தெய்வத்தையோ வள்ளலையோ வாழ்த்துவதற்காகக் குளுவ நாடக் அமைப்பு தோற்றுவிக்கப் பெற்றுள்ளது. குறவஞ்சியின் பிற்பகுதியின் வளர்ச்சியாக இதனைக் கூறலாம். இது நாடகப் பண்புகளை மிகுதியாகக் கொண்டுள்ளது.

சிங்கன் அரங்கில் தோன்றி,

சிங்கணும் நானே கொடிக்குரச்

சிங்கனும் நானே சிங்கனும் நானே'

என்று பாடுவதில் இசைக்கும் ஆடலுக்கும் ஏற்ற அமைப்பு இருப் பதைக் காணலாம். குளுவனுடைய தோற்றப் பொலிவிலே அவனைச் சிறப்பித்துக் கூறுவதற்குப் போதுமானது.

'சுண்டு வில்லம்பு துலங்கு கூனளுவாள் மண்டலம் புகழ்சிங் கனும்வரு கின்றான் அரக்குடன் கள்ளும் மிகுதியாய் குடித்து

'வெறிக்கெனப் பார்த்து முறுக்கிய மீசையுடன்' குளுவன் வருகிறான். அவனுடைய வீரத் தோற்றம் இப்பாடலில் விளக்கப்படுகிறது. இவ்வாறு பலப்பல பாடல்களைக் குளுவ நாடகத்தில் பார்த்துப் பார்த்துச் சுவைக்கலாம். இத்தகைய இனிய கலை காலத்தால் மங்கி மறைந்து விட்டது. ஆயினும் சுவடிகளில் தங்கி இன்று அச்சு வாகனமேறி நமது கைகளில் நூல் வடிவில் தவழ்கிறது.