பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாட்டார் நாடகம்

162

(தெருக்கூத்து)

மேடை அலங்காரம் இன்றி தெருவில் ஒரு வெள்ளைத் துணியை இருவர் தூக்கிப் பிடிக்கவும் தீப்பந்தங்கள் ஒளி காட்டவும் ஆடை ஒப்பனை அதிகம் இல்லாத நடிகர் முன்னால் வந்து ஆடியும் பாடியும் தெருக்களில் நடித்துக் காட்டும் நாடகங் களை மக்கள் 'தெருக் கூத்து' என்று அழைத்தனர். இசைப் பாடல்களால் ஆன இத்தகைய நாடகங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்கள் மிகுதியாகக் கண்டு களித்தனர். வரவர சிறுசிறு பகுதிகளாய் உரைநடையில் உரையாடல் நடைபெறத் தொடங்கியது. மேடையின்றித் தெருக்களில் நடத்தப் பெற்ற நாடகங்கள் பரந்தவெளியில் கட்டப்பெற்றக் கீற்றுக் கொட்டகைகளில் நடைபெறலாயின். ஒன்றிரண்டு காட்சி மாற்றுத் திரைகள் தொங்கவிடப்பட்டன. முறையற்ற ஆடல்கள் நிறைந்த நாடகம் உணர்வுடைய நடிப்புகளால் காட்டப்படும் நிலைக்கு வளர்ந்தது. இத்தகைய நாடகங்கள் தெருக்களை விட்டு மேடைக்கு வந்தாலும் நாட்டுப்புற மக்களையே மிகவும் கவர்ந்து ஈர்த்தன. ஆகையினால் இத்தகைய நாடகங்களை மக்களுக்கு உரிய நாடகங்கள் என்னும் சிறப்புப் பொருள் தருமாறு 'நாட்டார் நாடகங்கள்' என்று உயர்வாக அழைப்பதே பொருத்தமாகவும் சிறப்பாகவும் உள்ளது.

நாட்டுப்புற மக்கள் கடின உழைப்பும் குறைந்த ஊதியமும் உடையவர்கள். வருமானத்துக்குக் தக்கவாறு எளிமையாகவும் மலிவாகவும் களியாட்டங்கள் நடத்தித் தங்கள் உழைப்பின் களைப்பைக் களைந்து இன்புற விரும்பினர். நாட்டார் நாடகங் கள் எளி தாக நடத்தப் பெறுவன். செலவும் குறைவு. ஊரார் கூடி அனைத்துச் செலவுகளையும் மொத்தமாக ஏற்று பரந்த வெளிக் கலையாகவே இத்தகைய நாடகங்களை விழா நாட்களில் நடத்தி வந்துள்ளனர். பல ஊர்களில் இன்றும் அவற்றைக் 'கூத்து' என்ற பெயரால்தான் நடத்துகின்றனர். உண்மையில் இவையே நவீன நாடகங்களின் தாயாக விளங்குகின்றன. புதுமைப் பொலிவில் நாட்டார் நாடகங்களை இகழ்ந்து ஒதுக்குவது பெற்ற தாயை இகழ்வதற்கு ஒப்பாகும். இன்று அரசும், நகரமும் நாட்டார் நாடகங்களுக்கு உரிய மதிப்பையும் பெருமையையும் கொடுப்பது மகிழ்வைத் தரும் சேவையே ஆகும்.

கலைச்

மேடை ஒப்பனையும் ஆடை ஒப்புடைமையும் அதிகம் இல்லாத நாட்டார் நாடகங்கள் நடிப்பை விடவும் பாடலுக்கே