பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

கடத்துவான். இவ்வாறு கண்ணாமூச்சி ஆடியபின் திடீரெனத் திரையை விலக்கிக்கொண்டு முன்னால் வந்து வேடிக்கை விளையாட்டில் இறங்குவான். அவனுடைய வருகை ஒரு விறுவிறுப்பை மூட்டி மக்களைச் சுறுசுறுப்படையச் செய்யும்.

நடிகரின் பாடல்களை வரிக்குவரி பின்பாட்டுக்காரர் திரும்பத் திரும்பப் படிப்பர். மத்தளம், அர்மோனியம், கிஞ்சிரா முதலிய பின்பாட்டுக் கருவிகள் துணையாக இணைக்கப்படும். அரிதாரம், செந்தூரம், கரி ஆகியவற்றால் ஒப்பனைசெய்வர். அத்திப்பாலால் மீசை, தாடி ஆகியவற்றை ஒட்டுவர். சிலசமயம் அவை ஒட்டகன்று தொங்கி மக்களின் கேலிக்கு நடிகர்களை ஆளாக்கி விடுவதும் உண்டு. நாட்டுப்புற நாடகங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சாதாரணமாக நடக்கும்.

பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நாட்டார் நாடகங் கள் உண்டு. அவற்றில் : முக்கியமாக அரிச்சந்திரன், பாரதம். இராமாயணம், பிரகலாதன் ஆகியவற்றைக் கூறலாம். சில நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் நடித்து நேரத்தைப் போக்குவர். வள்ளிக்கும் முருகனுக்கும் இடையிலுள்ள வாதம் ஒன்றரை மணி நேரம் நடக்குமாம். அந்தச் சமயங்களில் மக்கள் பாத்திரங்களை மறந்து நடிகர்களின் வாதத் திறமையைச் சுவைத்து மகிழ்வா ராம். அதே மக்கள் கழுகாசலக் காட்சியில் முருகன் வரும்போது கற்பூரம் கொளுத்தி இறைவணக்கம் செய்வாராம். இருநிலை நாட்டுப்புற மக்களின் சுவை தன்மை அமைவதைக் காணலாம். புராணக்கதையில் தேசீயப் பாடலைக் கேட்டுக் களிப்பதையும் பார்க்கலாம். இருநடிகர் எதிரும் புதிருமாகத் 'தர்க்கப்பாட்டு'ப் பாடி மக்களைக் கவர்வதும் உண்டு. எந்த நிலையிலும் மெலிவைக் காண நாட்டுப்புற மக்கள் விரும்புவதில்லை. பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் மேடையில் நடிகர்கள் ஆற்றலைக் காட்டித் தோற்றப் பொலிவுடன் நிமிர வேண்டும். எப்படியும் வென்றால் புகழப்படுவர்.

கதைப் பொருத்தமோ கலை ஒழுங்கோ அங்கு கருதப் பட்டதாகத் தோன்றவில்லை. எதிலும் முனைப்புடன் தோன்றி மிடுக்குடன் முன்னேறினால் பாராட்டப்படுவது வழக்கமாக உள்ளது. மக்கள் வியப்பாக இருப்பதை விரும்பி ஏற்பர். நல்லவர்களின் வெற்றிக்கு வேண்டுவர் தீயவர்களின் அழிவை வரவேற்பர். நல்லவர் வருந்தும்போது அவர்களுடன் வருந்தி யழுவர். சந்திரமதிக்காகவும் நல்ல தங்காளுக்காகவும் துயருற்று