166
இருவகைக் கூத்துகளிலும் ஒரே மாதிரி அமைப்புகள் மிகுதி யாக உள்ளன. கட்டை கட்டி ஆடுதல், கட்டாமல் ஆடுதல் என இருவகைத் தெருக்கூத்துகள் நடைபெறுகின்றன. கட்டை கட்டி ஆடுதல், கட்டாமல் ஆடுதல் என இருவகைத் தெருக் கூத்துகள் நடைபெறுகின்றன. கட்டை கட்டி ஆடுதல் என்பது புஜக் கட்டை, மார்பதக்கம், காதுக் கட்டை, கிரீடம் முதலிய அணிகளைக் குறிக்கும். இத்தகைய அணிகள் கனமில்லாத கலியாண முருங்கை மரத்தால் செய்யப் பெற்றிருக்கும். இதை அவர்களே அடிக்கடிப் பாடும் ஒரு பாடலால் அறியலாம்.
'கண்ணால முருங்கைக் கட்டை
கண்ணாடி பளபளக்க......'
என்று பாடுவர்.
தெருக்கூத்தில் சண்டை, கொலை முதலிய காட்சிகள் மிகக் குறைவு. அவற்றைப் பாடலாகப் பாடி விளக்கி விடுவர். இருவரும் வில்லை ஏந்திச் சண்டையிடுவதற்காக வருவர். ஆனால் அம்புகள் பாய்வது அரிது ஆயினும் மும்முரமான போர் நடக்கும் உணர்வை பாடலாலும் சாடலாலும் காட்டி விடுவர். அது தான் அவர்களுடைய கலைத்திறன்.
தெருக் கூத்தை வழிபாட்டுக் கடனாக மக்கள் இன்றும் நடத்தி வருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. மழையை வேண்டுவோர் விராட பருவத்தையும் மணம் விரும்புவோர் மீனாட்சி கல்யாணத்தையும் பிள்ளைப் பேறு வேண்டுவோர் சாவித்திரி சத்தியவான் நடத்துவதையும் வேண்டுதலாக நடத்தி யுள்ளனர். உண்மையான நம்பிக்கையுடன் நாட்டார் நாடகங் களை மக்கள் நடத்தியுள்ளனர் என்பதை உணரலாம்.
மேனாட்டு நாடகக் கல்வி தெருக்கூத்து மரபை மாற்றி யமைக்க வழிமுறை கண்டது. அறிஞர் பலரும் முயன்றனர். நாடகம் மாற்றமுடன் நகரங்களில் புகுந்தது. ஆயினும் பழைய மரபில்லாத நாடகங்களை நாட்டுப்புற மக்கள் பற்றுடன் விரும்பியதாகத் தெரியவில்லை. மதுரை உடையப்பா, புரசைத் தம்பிரான், பில்லமங்கலம் மணிமுத்துப் பாகவதர் போன்றோர் நாட்டார் நாடக மரபைக் காத்து வருகின்றனர். புரசைத் தம்பிரான் அண்மையில் காலமாகி விட்டாலும் அவருடைய மாணவர் அவருடைய கலைமரபைக் காக்கத் தவறவில்லை. தமிழ்நாட்டு அரசு சார்பில் இயல் இசை நாடக மன்றம், நல்ல முறையில் நாட்டுப்புற நாடகக் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும். தந்து வளர்த்து வருகிறது,