8
இந்த உருவம் கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அவள் ஒரு கண்ணாடியைப் பார்த்துக் கூந்தலை அழகுபடுத்துவதாகவும் கருதலாம். எப்படியும் அவள் தோன்றிய பழங்குடி அழகுணர்ச்சி உடையது என்பதற்கு ஓர் அருமையான சான்றாக விளங்குவது உறுதி. இந்தப் பழங்குடி மக்கள் கலைகளிலும் நல்ல ஈடுபாட்டுடன் இன்றும் விளங்கு கிறார்கள்.
குதிரை
மனித உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவகித்துக் காட்டுவதிலும் பழங்குடி மக்கள் நுண்ணறிவு பெற்றிருந்தனர் பீலர் Bhi என்ற பழங்குடியினர் குதிரை ஏறிச் செல்லும் மனி தவுருவைப் புனிதமாகக் கருதி வழிப்படுகின்றனர். மனி தனுடைய உயிர் இறந்த பின்னர் மேலுலகம் செல்வதை இவ் வாறு படைத்துள்ளனர் என்று கருதப்படுகிறது. இந்த இடத்தில் ஹாரப்பாவில் கிடைத்த பழக்கப்பட்ட உருவையும் சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருடன் குதிரையேறிக் கைலாசம் சென்ற பெரிய புராண நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு சில ஆய்வு உண்மைகளைக் காண முயலலாம். தமிழ் நாட்டில் குதிரையில் அமர்ந்து காட்சி தரும் ஐயனார் சிலைக்கு இருக்கும் புனிதச் சிறப்பையும் சிந்திக்க வேண்டும். இராஜபுதனத்திலும் குதிரையில் ஏறி வரும் வீரனின் சிலைக்கு ஒரு புனிதமும் மதிப்பும் கொடுக்கப் பெறுகிறது. பீலர் களுடைய இறுதிச்சடங்கு இறந்தவரின் குதிரையின் முன்பே இன்றும் நடைபெறுகிறது. நான்மறையும் குதிரைப்
பய
ணத்தைப் புனிதமாகக் கருதி இசைக்கிறது. மிகப் பழங்காலத் திலிருந்தே குதிரைவீரன் உருவுக்கு ஒரு சிறப்புப் பொருள் இருந்ததாகக் கருதலாம். பூவுலகிலிருந்து இறப்பின் பயனாக மேலுலகப் பயணம் நேரிடுவதைக் குதிரை எறி விரையும் வீரனின் சிலை மூலம் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே மனிதன் உரு வகித்து காட்ட விரும்பியுள்ளான் என்று நினைக்கலாம். இக் கருத்துக்குத் துணைசெய்யும் சிலசெவிவழிக் கதைகளும் பழங்குடி மக்களிடம் பரந்துள்ளன. சிந்தனை அறிவு கலைக்குள் ஊடுருவி நல்லாக்கம் பெற்றுள்ளதை இதன் வாயிலாக நன்கு உணரலாம்.
நீத்தார் வழிபாடும் அவர்களுடைய புகழைப் பாடி மகிழும் இயல்பும் நாட்டுப்புறக் கலைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளன.
3.
Stella Kramrisco, Unknown India, 'Rural Art in Tribe and Village, (Philadelphia, 1968), P. 50.
4. lb.d, P. 51.