9
பழங்குடிகளிடையே இறந்தவர்களைப் பலமுறை நினைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்ததாக அறிகிறோம். இறந் தோரின் ஆண்டு விழாக்களில் அவர்களுடைய எலும்புகளைத் தோண்டியெடுத்து மறு அடக்கம் செய்துள்ள செய்திகளும் உள்ளன. ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீத்தார் வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் இன்றும் இத் தகைய வழக்கம் கேரளத்தில் அட்டபாடி மலைகளில் வசிக்கும் பழங்குடியினரிடம் உண்டு. அதேபோல் அஸ்ஸாம் நாட்டு நாகர், ஒரிஸா நாட்டு கதபர், போண்டோ போன்ற பழங்குடியினர் நீத்தார் வழிபாடு நடத்தி மகிழ்கின்றனர். இத்தகைய விழாக் களில் பலவிதமான கலைகள் நடத்தி இறந்தோரை நினைத்துப் பாராட்டி இருப்பர்.
(தென்னிந்தியப் பழங்குடியரான தோதவர், காடர், குரும்பர்,
இருளர்,மலசர், மன்னன், முதுவன், காணிக்காரன். செஞ்சு, லம்பாடி,சோரர், கொண்டர், கோயர் போன்ற இனத்தவர் களின் ஆடையணிகள், இசைக் கருவிகள், சமயச் சடங்குக்கு உரிய பொருள்கள், மந்திரப் பாவைகள், பாவைக் கூத்தாடும் பொருள்கள் ஆகியவற்றைக் காணின்6 அவர்களிடம் பழங் கலைகள் மிகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று நம்பலாம்.
இன்று அருங்காட்சியகங்களில் சேகரித்து வைக்கப் பெற்றிருக்கும் பழங்குடி மக்களின் அணிகலன்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றைக் காணும் போது அவர்களுடைய கலையார்வம் நன்கு புலனாகிறது. மேலும் மந்திரங்களினால் தீய ஆவிகளை மரத்தினால் செய்த மனித உருவங்களில் செலுத்தும் பழக்கமும் இருந்துள்ளது'. மந்திர வேலைகள் செய்யும் சடங்குகளில் கலைத் தொடர்புடைய நிகழ்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப் பட்டிருக்க வேண்டும்.
5. பழங்கால பண்பாடும் பழங்குடி பண்பாடும், சென்னை அருங்காட்சியக வெளியீடு, (சென்னை, 1974) பக். 13-14.
6. இத்தகைய பொருள்கள் சென்னை அருங்காட்சியகத்தில் கூறுசெய்து ஒழுங்காக வைக்கப் பெற்றுள்ளன.
7. உடல் முழுவதும் ஆணிகள் அடிக்கப்பட்டு மந்திர ஆற்றலால் ஆவியைச் செலுத்திக் கடலில் தூக்கி எறியப்பட்ட ஒரு பெண்ணின் மரவுருவம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.