பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

பழங்குடியினரில் கலையிலிருந்து தொடக்க காலப் பழக்கங்

களையும் வழக்கங்களையும் ஓரளவு அறியலாம். கலையுணர்வு வெறித்தன்மையுடையதாகவும் கடுமையானதாகவும் இருந் திருக்க வேண்டும். முறையைப் பற்றிக் கவலைப் படாது முண்டி யடித்துக் கலையுணர்வை வெளிப்படுத்தி இருப்பர். இயற்கையின் செயல்களையே பெரும்பாலும் தங்கள் கலைமாதிரிகளாகக் (Models for art) கொண்டிருப்பர். விரிவுபடாத அறிவில் ஊறிய எண்ணங்களைக் கொண்டே பல கலைகளை உருவாக்கி இருக்க வேண்டும். அறியாமை காரணமாக ஏற்பட்ட பலவிதமான அச்சங்களுக்கு விடுவாயாகவும் சில கலைகளைக் கற்பனை வாயிலாக உருவாக்கி இருக்கலாம். காலக் கடப்பால் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி கலைகளுக்குச் சில திருத்தங்களைக் கொடுத்ததோடு ஓரளவு பொருத்தமான முறைகளையும் வகுத் திருக்க வேண்டும். இத்தகைய சிறுசிறு மாற்றங்களுடன் சிறிதளவு சீர்திருத்தம் பெற்ற கலைகள் தொன்மை நிலையி லிருந்து வளர்ந்து நாட்டுப்புறக் கலை நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும். அடிப்படை உணர்வில் இவை அதிகம் மாற்றம் பெற்றிருக்க முடியாது. ஆனால் புலப்படுத்தும் முறையிலும் செயல் தோற்றத்திலும் சிறிதளவு மாறி இருக்கும்.

பின்னர் விதிமுறைக் கட்டுபாடுகளுடன் திறன்பட்ட செயல் களுடன் கலைகள் வளரத் தலைப்பட்டன. மிக நுட்பமான அறிவுடன் செம்மைப்பட்ட கலைகள் திருந்திய கலையாக நாகரிக மக்களால் மதிக்கப்பட்டன. கலைஞர்கள் கலையோடு தன் உணர்வு கொண்டு ஒன்றுவதைவிடவும் தங்கள் திறமைகளைக் காட்டிக் கலைக் கூறுகளைப் புலப்படுத்துவதில் தான் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். எளியதாகவும் இனியதாகவும் இருந்த நாட்டுப்புறக் கலைகள் அரியதாகவும் ஆழமுடைய

தாகவும் மாறித் திருந்தின.

(முனித உணர்விலிருந்து குழைத்து எடுக்கப்படுவதினால் அனைவருக்கும் பங்குரிமையுடைய தொன்மைக்கலைகள் எல் லோரும் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ளும் இயல்புகளுடன் இருந்தன. பங்குபெறுவோர் குறைந்து அனைவருக்கும் இன்பம் கொடுக்கும் பொதுச் சொத்தாக நாட்டுப்புறக் கலைகள் விளங்கின. அரிய திறமைக்குள் அடங்கி விதிமுறைகளால் கட்டுப்படுத்தப் பெற்று கலையறிவுடையோர்களுக்கு மட்டுமே உரிமையுடைய அரும்பொருளாகத் திருந்திய கலைகள் முடங்கின. அனைவருக்கும் உரிமையுடைய மக்களின் சொத்தான நாட்டுப்