பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21

கபில வத்ஸாயாயன் நாட்டுப்புற நடனக்கலை வகைப்பாடு செய்துள்ளார். அது கலைகளைப் பிரித்தறிய ஓரளவு உதவுவதாக அமைகிறது. அந்த வகைப்பாடு இவ்வாறு உள்ளது.

(i) வேட்டை நடனங்கள் அல்லது விலங்குப் போலிகள் (ii) வளமை, மந்திரம்; நோன்பு முதலிய நடனங்கள் (iii) தொழில் நடனங்கள்

(iv) பருவகால நடனங்கள்

v) இதிகாச (தொன்மம்) நடனங்களும், நாட்டிய

நாடகங்களும்

(vi) வழிபாட்டு நடனங்கள்

(vii) வழிவழி வளர்ந்த நாட்டிய நாடகங்கள்.

நடனக் கலைப் பொறுத்தவரையில் இப்பிரிவுகள் ஓரளவு பொருந்தும். மேலும் வேட்டையைத் தொழிலிலிருந்து பிரித்துள்ளது பொருத்தமாகப் படவில்லை. இரண்டாவது பிரிவும் ஆறாவது பிரிவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளதாக உள்ளன. ஐந்தும் ஏழும் பிரித்தறியக் கடினமாக இருக்கும். ஒன்றிலுள்ளது இன்னொன்றுக்கும் பொருந்துவதாகக் காணப் படும். கலைகளை வகைப்பாடு செய்வது கடினமாக இருப்பினும் இன்னும் சிறப்பான முறையில் கூடியவரையிலும் பொருத்தமாக வகைப்படுத்திப் பிரிக்க முயலலாம்.

சமூகக் கலைகள்

இணைந்து ஒரு சமூகமாக வாழும் மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைகளைத் தொடர்பு படுத்தியும் இயல்புகளைப் புலப்படுத்தியும் சில கலைகளை அமைத்துள்ளனர். தாங்கள் வாழும் இடங்களின் இயற்கைச் சூழலையும் பருவ காலங்களை விளக்கியும் கலைகள் உருவாகி இருக்கின்றன. இவற்றில் சில சமூகச் சார்புடன் விளக்குகின்றன. அவற்றைச் சமூகச் சார்புக் கலைகள் என்று அழைக்கலாம்.

மனிதனின் வாழ்க்கையில் அவனுடைய பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன. பெண் களின் வாழ்வில் அவர்கள் பூப்பெய்தலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இத்தகைய வாழ்க்கைப் பருவ மாற்றங்களைப் பல விதமான கலைகளை நடத்திக் கொண்டாடு

(2) Kapila Vatsyayan, Traditions of Indian Folk Dance India Library. (New Delhi, 1976), P. 30.